Published:Updated:

சிவகாசி வெடி விபத்தில் பலியான 40 பேருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி!

Vikatan Correspondent
சிவகாசி வெடி விபத்தில் பலியான 40 பேருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி!
சிவகாசி வெடி விபத்தில் பலியான 40 பேருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி!

விருதுநகர்: சிவகாசி அருகே முதலிப்பட்டியில் நடந்த பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 40 பேர் இறந்த சம்பவம் நிகழ்ந்து இன்றோடு ஒரு வருடம் முடிகிறது. இதனையொட்டி பலியானவர்களுக்கு சுற்றுவட்டார கிராமத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

சிவகாசி வெடி விபத்தில் பலியான 40 பேருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி!

சிவகாசி அருகே முதலிப்பட்டியில் ஓம் சக்தி பட்டாசு ஆலை இயங்கி வந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி இந்த பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடி விபத்தில் 40 பேர் பலியாகினர். முதலிப்பட்டி வெடி விபத்து சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

சிவகாசி வெடி விபத்தில் பலியான 40 பேருக்கு முதலாமாண்டு நினைவஞ்சலி!

இந்நிலையில் இந்த விபத்து நடந்து இன்றோடு ஒராண்டு ஆகி விட்டது.

##~~##
இந்த விபத்தில் பலியான பெரும்பாலான தொழிலாளர்கள் முதலிப்பட்டியையும், அதை சுற்றியுள்ள கிராமத்தையும் சேர்ந்தவர்கள். எனவே விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முதலிப்பட்டியில் நினைவு ஸ்தூபி அமைத்து, கிராம மக்கள் மற்றும் சி.ஐ.டி.யூ. பட்டாசு தொழிலாளர் சங்கத்தினர் இன்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பலியான 40 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக முதலிப்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம். முத்துராஜ்