Published:Updated:

பிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்!

விகடன் விமர்சனக்குழு
பிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்!
பிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்!
பிரேமானந்தா ஆசிரமத்தில் மர்மமாக இறந்து கிடந்த பெல்ஜியம் மாணவர்!

திருச்சி: பிரேமானந்தா சாமியார் ஆசிரமத்தில் மர்மமான முறையில் பெல்ஜியத்தை சேர்ந்த மாணவர்  ஒருவர் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழும்போது பல சர்ச்சைகளுக்கு ஆளாகி, ஆசிரமத்தில் இருந்த சீடர் கொலை வழக்கில் பல ஆயுள் தண்டனைகளை பெற்று, சிறையிலேயே இறந்துபோனவர் சாமியார் பிரேமானந்தா.

இரட்டை ஆயுள் தண்டனை பெற்றபோது திருச்சி பாத்திமாநகரில் உள்ள பிரேமானந்தா ஆசிரமம் தமிழகம் முழுக்க பிரபலமாக பேசப்பட்டது. தொடர்ந்து சாமியார் பிரேமனந்தாவின் மரணத்திற்கு பிறகும் ஆசிரமம் பற்றிய சர்ச்சைகளுக்குள் ஆளாகி வருகிறது.

இந்நிலையில் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில், நேற்று மதியம் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துபோனதுதான் திருச்சியை சுற்றியுள்ள வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் மார்னிக்ஸ் கியூலன். இவர் பிரேமானந்தாவின் ஆசிரமத்தில் தங்கிக்கொண்டு திருச்சி கிறிஸ்துராஜ் கல்லூரியில் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாமாண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், ஆசிரமத்தில் உள்ள ஒரு அறையில் கியூலன் தூக்கில் தொங்குவதை ஆசிரமத்தில் இருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்த தகவல் தெரியவே விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

##~~##
வழக்கமான ஒருவர் இறந்துவிட்டால் உடலை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போலீசார், நேற்றிரவு 9 மணிவரை இறந்த கியூலன் உடலை ஆசிரமத்திலேயே வைத்து விசாரணை நடத்தினர். இறுதியில் கியூலன் மனநிலை சரியில்லாதவர் என முடிவு செய்த போலீசார், வழக்கை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர்..
மனநலம் சரியில்லாதவர் எப்படி கல்லூரி படிப்பை தொடர முடியும். இறந்தவரின் உடல் காலதாமதமாக மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது ஏன்.? என்கிற பல கேள்விகளை எழுப்பியுள்ளது பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த மாணவரின் மரணம்.
சி.ஆனந்தகுமார்


படம்:
பா.கந்தகுமார்