Published:Updated:

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் லஞ்ச வேட்டை!

விகடன் விமர்சனக்குழு
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் லஞ்ச வேட்டை!
வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் லஞ்ச வேட்டை!

வேலூர்: வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று உணவு பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் விநாயக மூர்த்தி என்பவ்லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் தொடரும் லஞ்ச வேட்டை!

இதுகுறித்து, பேசிய லஞ்ச ஒழிப்பு போலீசார்  ’’இறையான் காடு பகுதியில் ஆறுமுகம் என்பவர் ஆரியபவன் என்ற உணவகம் நடத்தி வருகிறார். இந்த உணவகம் ஆண்டு தோறும் புதுபிக்கப்பட வேண்டும். எனவே இந்த ஆண்டிற்கு புதுப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி விநாயக மூர்த்தியை அணுகியுள்ளார்.  அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர் விநாயகமூர்த்தி, 'உணவகத்தை புதுப்பிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும்' என கேட்டுள்ளார்.

##~~##
இதுகுறித்து, வேலூர் லஞ்ச ஒழிப்பு காவல் துறையின் துணை கண்காணிப்பாளர் பாலசுப்பரமணியனிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் இன்று பாலசுப்பிரமணியன் தலைமையில் நாங்கள் ரசாயனம் தடவிய ரூபாய் தாள்களை ஆறுமுகத்திடம் கொடுத்தோம்.  அந்த ரூபாய்களை வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்த விநாயகமூர்த்திடம் ரூ 12 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது நாங்கள் அவரை கைது செய்தோம். இப்போது நாங்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.
தொடர்ந்து அரசு ஊழியர்கள் லஞ்ச வழக்கில் கைது செய்யப்படுவது வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-ஏ.சசிகுமார்
படம்:
ச.வெங்கடேசன்