Published:Updated:

காதல் திருமணத்தால் மோதல்: கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு!

விகடன் விமர்சனக்குழு
காதல் திருமணத்தால் மோதல்: கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு!
காதல் திருமணத்தால் மோதல்: கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே காதல் திருமணத்தால் கிராமத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

காதல் திருமணத்தால் மோதல்: கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு!

தர்மபுரி இளவரசன், திவ்யாவின் காதல் திருமணத்தால் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் வீடுகள் சூறையாடப்பட்டு இருதரப்பினருக்கும் மோதல் முற்றியது. இதுபோலவே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகில் உள்ள வெங்கடாசலபுரத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கருப்பசாமியும், நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற பெண்ணும் மூன்று வருடமாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்ததும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையடுத்து, கருப்பசாமியும், கஸ்தூரியும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி சென்னையில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் திருமணம் செய்து கொண்ட விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரிய வந்துள்ளது. அதன்பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே சிறிய அளவில் மோதல் ஏற்பட்டது.

காதல் திருமணத்தால் மோதல்: கிராம மக்கள் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரிடம் மனு!

கருப்பசாமியின் குடும்பத்தார், தன் மகளை கடத்தி சென்று விட்டதாக கஸ்தூரி குடும்பத்தார் போலீசில் புகார் செய்தனர். இந்த தகவல் அறிந்த இருவரும் உயர் நீதிமன்றத்தில் சரணடைந்து, ‘‘நாங்கள் இருவரும் சம்மதித்துதான் திருமணம் செய்து கொண்டோம். என்னை யாரும் கடத்தவில்லை, நாங்கள் வாழ பாதுகாப்பு தாருங்கள்‘‘ என்று கூறி இருக்கிறார்கள். இருதரப்பினரிடையே போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வெங்கடாசலபுரத்தில் கருப்பசாமியின் வீட்டில் கஸ்தூரியை பாதுகாப்பாக விட்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இருதரப்பினருக்குமிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாசிலாமணி மற்றும் அவரது மகன் ராஜபிரபு ஆகியோர் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யக்கோரியும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன், கிராம மக்களும் மறியலில் ஈடுப்படனர். கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜயகார்த்திகேயன் விரைந்து வந்து கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்ற்னர்.

##~~##
இந்நிலையில், வெங்கடேசபுரத்திலுள்ள மற்றொரு தரப்பினர், ‘‘தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளனர்.
இதையடுத்து, மீண்டும் மோதல் ஏற்படாமல் இருக்க, வெங்கடேசபுரம் கிராமத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தி, படங்கள்:
இ.கார்த்திகேயன்