Published:Updated:

காஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்!

விகடன் விமர்சனக்குழு
காஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்!
காஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்!
காஞ்சிபுரத்தில் பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடம்!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள பள்ளியில் தீக்குளித்த மாணவி கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தீக்குளிப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

காஞ்சிபுரத்தையடுத்த அப்துல்லாபுரத்தை சேர்ந்த கன்னியப்பன் என்பவரின் 11 வயது மகள் சினேகா. பெரிய காஞ்சிபுரம் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்த சினேகா, விடுமுறைக்குப்பின் நேற்று பள்ளிக்கு சென்றாள்.

காலை பள்ளி இடைவேளையின் போது மாணவி சினேகா கழிவறைக்கு சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த ஆசிரியர்கள் ஓடி சென்று மாணவி உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட மாணவி சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

40 சதவீத தீக்காயம் உள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள மாணவி சினேகாவை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

##~~##
தற்போது மாணவி பேச முடியாத நிலையில் உள்ளதால் தீக்குளித்ததற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. முகம், கழுத்து, உடம்பு பகுதியில் பலத்த தீக்காயம் உள்ளது. தீக்காயம் காரணமாக சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. மாணவி பேசத் தொடங்கிய பிறகே வாக்குமூலம் பெற முடியும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகே தீக்குளிப்புக்கான காரணம் தெரிய வரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மாணவிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் ஒருவர் கூறுகையில், "40 சதவீத அளவுக்கு தீக்காயம் ஆழமாக இருப்பதால் சுவாசிப்பதில் சிரமம் உள்ளது. முகம், மார்பு, இரண்டு கைகள் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. கண் இமை கருகி விட்டாலும் கண்பார்வை நன்றாக உள்ளது. ஆபத்தான நிலையில் இருக்கும் மாணவியை காப்பாற்ற முயற்சி எடுத்து வருகிறோம்" என்றார்.