Published:Updated:

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி பெரியார் தி.வி.க. சாலை மறியல்!

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி பெரியார் தி.வி.க. சாலை மறியல்!
காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி பெரியார் தி.வி.க. சாலை மறியல்!

புதுச்சேரி: இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்கக் கோரி புதுச்சேரியில் பெரியார் திராவிட விடுதலை கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி பெரியார் தி.வி.க. சாலை மறியல்!

இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை சுமார் 10 மணியளவில் புதுச்சேரி, ராஜா தியேட்டர் சிக்னல் அருகில் பெரியார் திராவிட விடுதலை கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து செல்லாததையடுத்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்கக்கோரி பெரியார் தி.வி.க. சாலை மறியல்!

இதுதொடர்பாக பெரியார் திராவிட விடுதலை கழகத்தின் தலைவர் கோகுல் காந்தி

##~~##
கூறும்போது, ''ஈழத்தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்த ராஜபசே அரசு காமன்வெல்த் மாநாட்டை நடத்தி தன் மீது படிந்த கறையை துடைத்துவிடலாம் என்று நினைக்கிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை மண்ணில், காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது. இலங்கையில் நடைபெறவிருக்கும் இந்த மாநாட்டில் இந்திய அரசு கலந்துகொண்டால், அது தமிழர்களை புண்படுத்தும் விதமாகவே அமையும்.
பிரதமர் மன்மோகன் சிங் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும். சென்னையில், காமன் வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தோழர் தியாகு கடந்த 15 தினங்களாக உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய கருத்தை நாங்களும் ஆதரித்து அவருக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளோம்'' என்றார்.
நா.இள.அறவாழி
படங்கள்:
ஜெ.முருகன்