Published:Updated:

தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டு நர்ஸிடம் நகை கொள்ளை!

விகடன் விமர்சனக்குழு
தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டு நர்ஸிடம் நகை கொள்ளை!
தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டு நர்ஸிடம் நகை கொள்ளை!
தூத்துக்குடி: துப்பாக்கியால் சுட்டு நர்ஸிடம் நகை கொள்ளை!

தூத்துக்குடி: வீட்டில் தனியாக இருந்த செவிலியரை துப்பாக்கியால் சுட்டு, நகைகளை திருடர்கள் கொள்ளையடித்த சம்பவம் தூத்துக்குடி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தூத்துக்குடி செல்சினி காலனி கெளசல்யாபுரத்தில் வசித்து வருபவர் சுசீலா (35). இவர், தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில்,  சுசீலா இன்று காலை வீட்டில் தனியாக சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் சுசீலாவின் கழுத்தில் கிடந்த பதினொன்றரை பவுன் நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். அப்போது, சத்தம் போட்ட சசீலாவை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், சுசீலாவின் கழுத்தில் குண்டு பாய்ந்தது.

##~~##
அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சசீலா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
பட்டப்பகலில் செவிலியர் ஒருவர் கொள்ளையர்களால் துப்பாக்கியால் சுட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் தூத்துக்குடி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
சரவண பெருமாள்