Published:Updated:

சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!
சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

சென்னை: மணல் அள்ளுவதற்கு அனுமதித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், பொதுமக்களின் நலனை ஆட்சியர்தான் கவனிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
 

சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

ரயில்வே பணிக்கு தேவைப்படும் சவுடு மண் சப்ளை செய்யும் கான்ட்ராக்ட் பெற்றிருக்கும் மகேஷ் என்பவர், திருவாரூர் மாவட்டம், தில்லைவிளாகத்தில் இதற்காக சுமார் 4 ஹெக்டேர் நிலத்தை வாங்கினார். சொந்த நிலம் என்றாலும், மணல் எடுப்பதற்காக சட்டப்படி தாசில்தார், மாநில சுற்றுப்புறசூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையம் என்று எல்லா இடங்களிலும் புகுந்து உரிய அனுமதியைப் பெற்றார்.

ஆனால், 'இப்படி மண் அள்ளுவது கிராமத்தின் சுற்றுப்புறச் சூழலை மட்டுமல்ல... ஊரைச் சுற்றி அமைந்திருக்கும் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், ஊரையொட்டி ஓடும் கோரையாறு, கூப்பிடு தூரத்திலிருக்கும் முத்துப்பேட்டை சதுப்பு நிலக்காடு என அனைத்துக்குமே ஆபத்தாக முடியும்' என்று கொதித்த கிராமத்தினர், 'மண் அள்ள அனுமதிக்கக் கூடாது' என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல், அனுமதியை தாராளமாக கொடுத்தார் ஆட்சித் தலைவர்.

ஆனால், உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக... தான் நினைத்தபடி மகேஷால் மண் அள்ள முடியவில்லை. இதனால், காவல்துறையைத் தேடி ஓடினார். அவர்களோ... 'ஊர் மக்களின் கோபத்துக்கு ஆளாக முடியாது. நீதிமன்றத்துக்கு போ' என்று கைவிரித்து விட்டனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்ற படியேறிய மகேஷ், 'சவுடு மணல் அள்ளுவதற்கு அனுமதித்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த உத்தரவிட வேண்டும். மணல் அள்ளுவதற்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும்' என்று மனுவைத் தாக்கல் செய்தார். இது அவரையே திருப்பித் தாக்கியிருப்பதுதான்... அசத்தல் முடிவு!
 

சுற்றுச்சூழலுக்கு வேட்டுவைத்த கலெக்டர்... சாட்டையைச் சுழற்றிய நீதிபதி!

வழக்கை விசாரித்த நீதிபதி கே.கே.சசீதரன், இந்த வழக்கில் நடந்திருக்கும் அடுக்கடுக்கான விதிமீறல்களை கண்டு அதிர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவருக்கு எதிராக சாட்டையைச் சொடுக்கியிருக்கிறார்.

''சுற்றுச்சூழல் விவகாரங்களை அலுவலகத்துக்குள் உட்கார்ந்து கொண்டு கணிக்க முடியாது. நேரில் சென்று ஆய்வு செய்வது அவசியம். மண் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட விவகாரம், உள்ளூர் ஊராட்சி நிர்வாகத்துக்கு தெரிவிக்கப்படவில்லை. மண் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அதையும் கணக்கில் எடுக்கவில்லை. அற்ப காரணங்களுக்காக உள்ளூர் மக்களின் மனுவை மாவட்ட ஆட்சியர் தள்ளுபடி செய்துள்ளார்.

##~~##
'அந்த பகுதியில் குடிநீர் மாசுபடும், நிலத்தடி நீர் உப்புத் தன்மைக்கு மாறிவிடும்' என்றெல்லாம் காரணங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால், சர்வாதிகாரத்துடன் செயல்பட்டிருக்கிறார். பொதுமக்களின் நலனை ஆட்சியர்தான் கவனிக்க வேண்டும். ஆனால், இதில் அவர் முக்கியத்துவம் காட்டவில்லை. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு மதிப்பீட்டு ஆணையமும் சரிவர செயல்படவில்லை. எனவே, நடைமுறைகளை பின்பற்றாமல் மாவட்ட ஆட்சியர் சட்ட விரோத உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்நிலையில், அதைச் செயல்படுத்த வேண்டும் என்று மகேஷ் கோரியிருப்பதை ஏற்க முடியாது. அவருடைய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது'' என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார் நீதிபதி சசீதரன்.
உறுதியோடு போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி!
அடுத்த கட்டுரைக்கு