Published:Updated:

காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் கைது!

Vikatan Correspondent
காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் கைது!
காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் கைது!
காதலித்து ஏமாற்றி விட்டு வேறு பெண்ணுடன் திருமணம்: வாலிபர் கைது!

வேலூர்: தன்னுடன் வேலை பார்த்த பெண்ணை காதலித்து ஏமாற்றி விட்டு, வேறு பெண்ணுடன் திருமணம் செய்ய இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வடுவன்தாங்கலைச் சேர்ந்த ஜெயவேல் என்பவரது மகன் செல்வராஜ் (28). இவர் வேலூரில் உள்ள தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு அதே கடையில் வேலை செய்யும் கிரிஜா (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சுமார் 5 வருடங்களாக காதலித்து வந்த அவர்கள் பல நேரங்களில் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

##~~##
இந்நிலையில் செல்வராஜிக்கும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அவர்களின் திருமணம் இன்று காலை நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை அறிந்த கிரிஜா, வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி, படம்: ச.வெங்கடேசன்