Published:Updated:

காஞ்சிபுரத்தில் போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!

காஞ்சிபுரத்தில் போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!
காஞ்சிபுரத்தில் போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!
காஞ்சிபுரத்தில் போலி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கைது!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்ட பெண்னை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் ரயில்வேசாலை அம்பேத்கர் நகரை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி கலைசெல்வி. இவர் இன்று காஞ்சிபுரம் விஷ்ணு காஞ்சி காவல் நிலைத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தமிழ்செல்வி என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள என் நிலத்திற்கு பட்டா வாங்கித் தருவதாக கூறி 16 ஆயிரம் ருபாய் பணம் பெற்று கொண்டார்.

அவர், தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றும் அடுத்த மாதம் 22 ஆம் தேதி காஞ்சிபுரம் கலெக்டராக பணி ஏற்க இருப்பதாகவும் கூறியதால் நம்பி அவரிடம் பணம் தந்தேன் என கூறியிருந்தார்.

இதையடுத்து, ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையிலான போலீசார், புகாரில் கூறப்பட்ட தமிழ்செல்வியை அழைத்து வந்து விசாரித்துள்ளனர். அப்போது,  தமிழ்செல்வி உண்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை என்பதும், அவர் ஏற்கனவே பல இடங்களில் இதுபோல் தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

##~~##
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணமலை மாவட்டம் போளுரை அடுத்த கொழப்பளூரை சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகள் தமிழ் செல்வி,  இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் பல பகுதிகளில் மோசடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்றுள்ளார். தமிழ் செல்வி, சில தினங்களுக்கு முன்தான் சிறையில் இருந்து வெளியே வந்திருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து, வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தமிழ் செல்வியை கைது செய்து மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தி, படம்: எஸ்.கிருபாகரன்