Published:Updated:

ஊட்டி வனத்துறையினருக்கு தண்ணிக்காட்டும் புலி!

ஊட்டி வனத்துறையினருக்கு தண்ணிக்காட்டும் புலி!
ஊட்டி வனத்துறையினருக்கு தண்ணிக்காட்டும் புலி!

ஊட்டி வனத்துறையினருக்கு தண்ணிக்காட்டும் புலி!

ஊட்டி வனத்துறையினருக்கு தண்ணிக்காட்டும் புலி!

ஊட்டி: ஊட்டியில் மனிதர்களை தாக்கி வரும் புலி, வனத்துறையினரையும், அதிரடிப்படையினரையும் தண்ணிக்காட்டி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் 2 பெண்கள் உள்பட 3 பேரை தாக்கி கொன்ற புலியை வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்த கூட்டுப்படையினர் கடந்த 10 நாட்களாக தேடி வருகின்றனர். கடந்த 15ஆம் தேதி இரவு குந்தசப்பை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த 48 கேமராக்களில் 4 கேமராக்களில் புலியின் உருவம் பதிவாகி இருந்தது. சுமார் 1 மணி நேரம் அந்த பகுதியில் புலி நடமாடியது கேமராவில் பதிவான படங்கள் மூலம் தெரியவந்தது.

இரவு நேரத்தில் மட்டுமே புலி வெளியே வருவதால் இரவில் பார்க்கக்கூடிய அதி நவீன கேமராவான ‘இன்பெரா ரெட் கேமரா‘ ஹைதராபாத்தில் இருந்து வரவழைக்கப்பட்டது. குந்தசப்பை பகுதியில், கடந்த 6ஆம் தேதி முத்துலட்சுமி என்கிற பெண்ணை கொன்ற இடத்தில் நேற்று மாலை 4.35 மணி அளவில் திடீரென்று புலி உலா வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் கூச்சல் போட்டனர். அதைத்தொடர்ந்து வனத்துறையினர், அதிரடிப்படையினர் பைனாகுலர் மூலம் அங்கு கண்காணித்தனர். அப்போது புலி நடமாடியது அனைவருக்கும் தெரியவந்தது.

தேயிலை தோட்டத்தில் சில நிமிடங்கள் உலா வந்த புலி பின்னர் ஒரு பாறையின் மீது தாவி ஏறி அருகில் இருந்த புதர் செடிக்குள் ஓடிச்சென்று மறைந்தது. புலியை கண்டதும் கூட்டுப்படையினர் 4 குழுக்களாக பிரிந்து 4 திசைகளில் இருந்து புலி இருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கடமான் ஒன்றை புலி விரட்டி வந்தது. புலியை கண்ட கடமான் அங்கிருந்து தப்பி ஓடியது.

மீண்டும் சில நிமிடங்கள் பொதுமக்கள் பார்வையில் பட்ட புலி அங்கிருந்து மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. அதற்குள் இருட்ட ஆரம்பித்து விட்டதால் புலி நடமாட்டம் யாருக்கும் தெரியவில்லை. பின்னர் இரவில் தெரியும் அதிநவீன கேமரா உதவியுடன் புலி நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

##~~##
கூட்டுப்படையினர் 4 திசைகளில் இருந்தும் புலி இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். ஆனால் அந்த பகுதி அடர்ந்த புதர்செடிகளை கொண்டு இருந்ததாலும், இருட்ட ஆரம்பித்து விட்டதாலும் புலி அங்கிருந்து மின்னல் வேகத்தில் பாய்ந்து தப்பி புதரில் மறைந்தது.
கடந்த 4ஆம் தேதி முதல் மனிதர்களை தாக்கி வரும் புலி நேற்று பொதுமக்கள் அனைவரின் கண்ணில் பட்டபோதும் வனத்துறையினர் மற்றும் அதிரடிப்படையினர் இணைந்த கூட்டுப்படையால் பிடிக்க முடியாமல் போனது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரைக்கு