Published:Updated:

மதுபான கடத்தல்: காரை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது!

மதுபான கடத்தல்: காரை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது!
மதுபான கடத்தல்: காரை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது!
மதுபான கடத்தல்: காரை விடுவிக்க லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் கைது!

விழுப்புரம்: மதுபான கடத்தல் வழக்கில் சிக்கிய காரை விடுவிக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்ட காவல் ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்துள்ளனர்.

விழுப்புரம், விளாம்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கடந்த சில மாதங்களுக்கு புதுச்சேரியில் இருந்து தனது டாடா சுமோ காரில் விழுப்புரத்திற்கு மதுபானம் கடத்தி வரும்போது, விழுப்புரம் மதுவிலக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரது காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த கிருஷ்ணமூர்த்தி, வழக்கில் சிக்கியிருந்த தனது காரை விடுவிக்கக்கோரி விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் சேகரிடம் கேட்டுள்ளார். இதற்கு லஞ்சமாக ரூ.20 ஆயிரம் தந்தால் காரை விடுவிப்பதாக காவல் ஆய்வாளர் சேகர் கூறியுள்ளார்.

##~~##
இந்நிலையில், கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்பு போலீசில் அளித்த புகாரின் பேரில், ரசயானம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். இந்த பணத்தை மதுவிலக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் சேகர் மற்றும் தலைமைக் காவலர் ஆகியோர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்போது மறைத்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக கைது செய்தனர்.

ஆ.நந்தகுமார்