Published:Updated:

புகார் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: தவிப்பில் தூத்துக்குடி அதிகாரிகள்!

விகடன் விமர்சனக்குழு
புகார் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: தவிப்பில் தூத்துக்குடி அதிகாரிகள்!
புகார் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: தவிப்பில் தூத்துக்குடி அதிகாரிகள்!

தூத்துக்குடி: புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால், புகார் கூறுவோரை எதிர்த்து போராட்டத்தில் குதித்துவிடுகிறார்கள். இதனால் செய்வதறியாது தவித்து வருகின்றனர் தூத்துக்குடி மாவட்ட அதிகாரிகள்.

புகார் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: தவிப்பில் தூத்துக்குடி அதிகாரிகள்!

தமிழகம் முழுவதும் போதிய பஸ் வசதியில்லாத பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்காக மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரிய பஸ்கள் இயங்காத பகுதியில் மட்டுமே மினி பஸ்களை இயக்க வேண்டும் என்பதே சட்டம் . ஆனால் சமீப காலமாக அந்த மினி பஸ்கள், அனுமதி வாங்கிய வழித்தடத்தில் இயங்காமல் பெரிய பஸ்கள் இயக்கப்படும் வழித்தடத்தில் இயக்கப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும் தாண்டி கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும் புகார்கள் கூறப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் நஷ்டமடைவதற்கு இந்த மினிபஸ்களின் அத்துமீறல்தான் காரணம் எனவும் புகார்கள் சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்துக்கு புதிதாக வந்திருக்கும் வட்டார போக்குவரத்து அதிகாரி ஆனந்த், மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நேற்று ஏரல் - புதுக்கோட்டை இடையே வழித்தடம் மாறி இயக்கப்பட்டு வந்த மினி பஸ் மற்றும் அதிக கட்டணம் வசூலித்த பல பஸ்களை பறிமுதல் செய்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து 'முதல்வன்' சினிமா படம் ஸ்டைலில் கலெக்டருக்கு எஸ்.எம்.எஸ் மூலம் பொதுமக்கள் புகார்களை அனுப்பினர். உடனடி ஆர்.டி.ஒ. ஆனந்த் மற்றும் அதிகாரிகள் மேலும் பல வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தனர். இதில், ஏகப்பட்ட மினிபஸ்கள் புகாருக்கு உகந்ததாக இயக்கப்பட்டு வருவதை அறிந்த மாவட்ட கலெக்டரும், வட்டார போக்குவரத்து அதிகாரியும் இணைந்து, வரும் 8ஆம் தேதி மினிபஸ் நிர்வாகத்தினரை அழைத்து கூட்டம் ஒன்றை நடத்தி, விதிமுறைகளை நினைவுபடுத்தி அதன்படி நடக்க அறிவுறுத்த முடிவு செய்துள்ளனர்.

புகார் மீது நடவடிக்கை எடுத்தால் போராட்டம்: தவிப்பில் தூத்துக்குடி அதிகாரிகள்!

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக இன்று காலையிலிருந்து தூத்துக்குடி நகர பகுதியில் இயக்கப்பட்டு வந்த மினி பஸ்கள் அனைத்தையும் நிறுத்தி போராட்டத்தில் குதித்துவிட்டனர் அந்நிர்வாகத்தினர். இதனால் போக்குவரத்து வசதியின்றி தவித்த பொதுமக்களுக்கு குறிப்பிட்ட பகுதிகளுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. இதற்கிடையே தனியார் மற்றும் மினிபஸ் நிர்வாகத்துக்கு ஆதரவாக அரசு போக்குவரத்து கழகத்தில் ‘ஓ.டி’ லிஸ்டில் இருந்து வரும் சிலர், மினிபஸ் சென்று வந்த வழித்தடத்தில் அரசு பஸ்களை இயக்குவதற்கு தடையாக இருந்ததால் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் அரசு பஸ்களை இயக்கி சமாளித்தனர் அதிகாரிகள்.

##~~##
இதேபோல் தூத்துக்குடி அருகே தனியார் மினரல் வாட்டர் கம்பெனி மேலாளர் சுப்பிரமணியன் என்பவர் கொடுத்த ஒரு புகாரின் பேரில் வழக்கறிஞர் இக்னேஷியஸ் என்பவர் மீது தூத்துக்குடி, தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதைக் கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். நேற்று போராட்டம் தொடங்கிய நேரத்திலிருந்து நீதிமன்ற வளாகத்துக்குள் எந்த போலீசாரையும் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற நுழைவு வாயிலை இழுத்து மூடிவிட்டனர். இதனால் ஆஜர்படுத்துவதற்காக ஜெயிலிருந்து அழைத்து வரப்பட்ட கைதிகளோடு போலீசார் நீதிமன்றத்துக்கு வெளியில் காத்துக் கிடந்தனர்.
இதுமட்டுமில்லாமல் அவசரமாக கூட்டப்பட்ட வழக்கறிஞர்கள் கூட்டத்தில், ‘இனிவரும் காலங்களில் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மற்றும் செயலாளரை கலந்து ஆலோசனை செய்திட வேண்டுமென மாவட்ட எஸ்.பி.யை வழக்கறிஞர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது’ என்பன உட்பட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இப்போது ‘‘புகார்கள் குறித்து நடவடிக்கை எடுத்தால் எதிர்த்து போராட்டம் நடத்திவிடுகிறார்களே?’’ என்ற கேள்விகளோடு தவித்து வருகிறார்கள் தூத்துக்குடி அதிகாரிகள்.
-எஸ்.சரவணப்பெருமாள்
படங்கள்:
ஏ.சிதம்பரம்