Published:Updated:

உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

Vikatan Correspondent
உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சென்னை: மென்பொறியாளர் உமா மகேஸ்வரி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சிப்காட் நுழைவாயிலில் தகவல் தொழிநுட்பத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

பிப்ரவரி 13ஆம் தேதி இரவு பத்து மணியளவில் தனது நிறுவனத்தில் இருந்து கிளம்பிய உமா மகேஸ்வரி வீடு திரும்பவில்லை. ஒரு வாரம் கழித்து கடந்த சனிக்கிழமை, சென்னை சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அருகில் உள்ள புதரில் இருந்து அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இந்த படுகொலையை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், பெண் பணியாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்த வலியுறுத்தியும், 'சேவ் தமிழ்ஸ்' இயக்கம் சிறுசேரியில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. சிப்காட் தொழிற் பூங்கா நுழைவாயில் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், 600க்கும் அதிகமான தகவல் தொழில் நுட்பத்துறையினர் கோரிக்கை பதாகைகளுடன் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

சேவ் தமிழ்ஸ் இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் தோழர் பரிமளா, ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொண்டு கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக, உமா மகேஸ்வரியை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்யுங்கள். சிப்காட் வளாகத்திற்குள் உரிய பாதுகாப்பு தரத்தவறிய சிப்காட் அலுவலர்களை பணியிலிருந்து இடை நீக்கம் செய்ய வேண்டும்.

உமா மகேஸ்வரி கொலை: ஐ.டி. துறையினர் சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இரவு நேரங்களில் காவல் துறையினர் சிப்காட் பகுதியில் ரோந்து செல்ல வேண்டும். சிப்காட் பாதையெங்கும் கேமிரா பொறுத்த வேண்டும். பாலியல் தொந்தரவு தடுப்புக்குழு எல்லா நிறுவனங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் தமிழக அரசுக்கு வைக்கப்பட்டது.
 
அதேபோல், வெவ்வேறு பணி நேரங்கள் இருப்பதால் நாள் முழுக்க பேருந்து வசதியை வழங்குங்கள். பணியாளர்களை வார இறுதியிலும் வேலைக்கு வர நிர்பந்திக்கப்படுவதால் அப்போதும் பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும். சுழற்சி (shift) முறையில் வேலை பார்க்காத பெண்களுக்கான வேலை நேரத்தை மாலை 7 மணியோடு முடிக்க வேண்டும்.

அவசர பணி காரணமாக இரவு 7 மணிக்கு மேல் பணிபுரியும் பெண்களுக்கு உரிய போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட வேண்டும். அலுவலகத்திற்குள் ஏற்படும் பாலியல் தொந்தர‌வு தொடர்பாக விசாரிக்க உட்குழுக்களை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகளை அவர்கள் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்தி, படங்கள்: செ.கிரிசாந்