Published:Updated:

ரூ.1103.92 கோடியில் கட்டப்பட்ட பசுமை வீடுகள், பாலங்கள் திறப்பு!

Vikatan Correspondent
ரூ.1103.92 கோடியில் கட்டப்பட்ட பசுமை வீடுகள், பாலங்கள்  திறப்பு!
ரூ.1103.92 கோடியில் கட்டப்பட்ட பசுமை வீடுகள், பாலங்கள் திறப்பு!

சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக 1103 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பசுமை வீடுகள், புதிய கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
 

ரூ.1103.92 கோடியில் கட்டப்பட்ட பசுமை வீடுகள், பாலங்கள்  திறப்பு!

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகம் முழுவதும் 1080 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 60,000 பசுமை வீடுகள்; கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 12 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 8 ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடங்கள்; கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை,  தஞ்சாவூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 35 ஊராட்சிமன்றங்களுக்கு 2 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அலுவலகக் கட்டடங்கள்;

ரூ.1103.92 கோடியில் கட்டப்பட்ட பசுமை வீடுகள், பாலங்கள்  திறப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 8 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டடங்கள், பொது விநியோகக் கட்டடங்கள், அங்கன்வாடி மைய கட்டடங்கள் மற்றும் இரண்டு பாலங்கள்; என 1103 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான பசுமை வீடுகள், கட்டடங்கள், பாலங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட 2323 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நடப்பாண்டில் 4,000 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 40 கோடி ரூபாயும், 2323 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு நடப்பாண்டில் தலா 10 லட்சம் ரூபாய் வீதம் சமுதாய முதலீட்டு நிதி வழங்க 232 கோடியே 30 லட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசு அனுமதித்துள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்டம், பிடாரமங்கலம் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம், தவளைக்குளம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு முதல் தவணையாக தலா 4 லட்சம் ரூபாய் சமுதாய முதலீட்டு நிதி; தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்ற ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளின்
செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், அவற்றின் நிதி இணைப்பினை நன்கு செயல்படுத்தவும் ஊக்க நிதியாக ஒரு ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 4,000 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு 40 கோடி ரூபாய் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.