Published:Updated:

சென்னையில் அ.தி.மு.க வட்ட செயலாளர் வெட்டிக் கொலை!

Vikatan Correspondent
சென்னையில் அ.தி.மு.க வட்ட செயலாளர் வெட்டிக் கொலை!
சென்னையில் அ.தி.மு.க வட்ட செயலாளர் வெட்டிக் கொலை!
சென்னையில் அ.தி.மு.க வட்ட செயலாளர் வெட்டிக் கொலை!

சென்னை: சென்னையில் 5 பேர் கொண்ட கும்பலால் அ.தி.மு.க வட்ட துணைச் செயலாளர் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ஆறுமுகம். 115வது அ.தி.மு.க வட்ட துணைச் செயலாளராக இருந்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆறுமுகம் வீட்டிற்கு சென்று அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து காவல்துறையினர் விரைந்து வந்த ஆறுமுகம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.