Published:Updated:

காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)

Vikatan Correspondent
காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)
காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தனியார் மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)

குடிப்பழக்கம் தனிப்பட்ட குடும்பத்தின் பிரச்னை என்பதிலிருந்து அரசின் முறையற்ற நடவடிக்கையால் பொதுவான பிரச்னையாகி வருகிறது சமீப காலங்களாக. தமிழக அரசினால் டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் மதுக்கடைகள் அமைக்கப்படுவது குறித்து அரசு பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது.

இதுதவிர தனிநபர்கள் தொடுத்த வழக்குகளின் மூலம் நீதிமன்ற நெறிமுறைகளும் இதில் வகுக்கப்பட்டுள்ளன. எல்லாமிருந்தும் அரசும் அதிகாரிகளும் இதை பொருட்படுத்துகிறார்களா என்பதுதான் கேள்விக்குறி.
 

காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)

காஞ்சிபுரம் ரெட்டிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் விதிமுறையை மீறி நூறு அடிக்குள்ளான இடைவெளியில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. நகரின் முக்கிய பகுதியான இங்கு மாலை நேரங்களில் குடிமகன்கள் உற்சாகத்தில் போடும் ஆட்டம் அளவில்லாதது. கடந்த காலத்தில் இங்கு சில கொலை சம்பவங்களும் அரங்கேறியதும் உண்டு.

இதுதவிர மாலை நேரங்களில் சட்டவிரோத கும்பல் சந்திக்கும் இடமாக மாறிப்போனது இப்பகுதி. இந்த சம்பவங்களால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். பலமுறை இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தந்தும் பயனில்லை. இதையடுத்து, பொதுமக்கள் சார்பாக அரசுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 

காஞ்சியில் தனியார் மதுக்கடையை அகற்ற கோரி பொதுமக்கள் மறியல் (படங்கள்)

இந்நிலையில், அதே பகுதியில் மற்றொரு தனியார் பார் துவங்க அரசு அனுமதியளித்த தகவல் தெரியவந்ததையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று அந்த தனியார் பாரின் துவக்கவிழா நடத்தப்பட்டதையடுத்து கொதிப்படைந்த மக்கள் நகரின் முக்கிய பகுதியான ரங்கசாமிகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்னைக்கு சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பேச்சுவார்த்தையின் முதல்கட்டமாக குறிப்பிட்ட அந்த பாரின் பலகையை அதிகாரிகள் கழற்றினர். வாக்குறுதியின்படி அதிகாரிகள் தனியார் பாரின் அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என கொதிக்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

கிருபாகரன்