Published:Updated:

திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ: ரயில்கள் தாமதம்

Vikatan Correspondent
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ: ரயில்கள் தாமதம்
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ: ரயில்கள் தாமதம்
திருவள்ளூரில் சரக்கு ரயிலில் தீ: ரயில்கள் தாமதம்

திருவள்ளூர்: திருவள்ளூரில் நிலக்கரி ஏற்றி வந்த சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். இந்த விபத்தால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே இன்று காலை சரக்கு ரயில் ஒன்று நிலக்கரிகளை ஏற்றிக் கொண்டு வந்தது. அப்போது, 4 பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் நான்கு வண்டிகளில் விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்க போராடி வருகி்ன்றனர்.

இந்த தீ விபத்தால் விரைவு, மின்சார ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில்கள் காலதாமதமாக புறப்பட்டு செல்வதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.