Published:Updated:

மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)

Vikatan Correspondent
மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)
மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)

புதுச்சேரி: புதுச்சேரியில் பொறியியல் கல்லூரி மாணவியை தற்கொலைக்கு தூண்டிய விரிவுரையாளரை கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
 

மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)

புதுச்சேரி, சூல்தான்பேட்டையை சேர்ந்தவர் வினோதினி (18). கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் தொழிற்நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த மாணவி வினோதினி, கல்லூரியின் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமீபத்தில் நடந்த தேர்வில் மாணவி வினோதினி குறைவான மதிப்பெண் எடுத்திருந்தார். இது தனது பெற்றோருக்கு தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மதிப்பெண்ணை திருத்தினாராம். இது கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிய வந்திருக்கிறது.
 

மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)

இதையடுத்து, பள்ளி நிர்வாகமும், விரிவுரையாளர்களும் அடிக்கடி வினோதினியை குற்றப்படுத்தி வந்திருக்கின்றனர். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் தெரியவந்தது.
 

மாணவி தற்கொலை: விரிவுரையாளரை கைது செய்யக் கோரி உறவினர்கள் மறியல் (படங்கள்)

இந்நிலையில், மாணவியை தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி விரிவுரையாளரை கைது செய்யக் கோரி பெற்றோர், உறவினர்கள், சக மாணவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கல்லூரி நிர்வாகத்தினர் 10க்கும் மேற்பட்ட குண்டர்களை வைத்து மறியலில் ஈடுபட்டவர்களை தாக்கியுள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காவல்துறையினர் விரைந்து வந்து குண்டர்களில் இரண்டு பேரை கைது செய்தனர். இதையடுத்து, மறியலை அவர்கள் கைவிட்டனர்.

ந.இள.அறவாழி

படங்கள்:
முருகன்