Published:Updated:

சாதியைச் சொல்லி இழிவு: தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டம்!

Vikatan Correspondent
சாதியைச் சொல்லி இழிவு: தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டம்!
சாதியைச் சொல்லி இழிவு: தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டம்!

மதுரை : அதிக கட்டணம் வசூலித்ததை கண்டித்து வழக்கு தொடுத்ததால், சாதியைச் சொல்லி இழிவுப்படுத்திய தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சாதியைச் சொல்லி இழிவு: தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டம்!

மதுரை மாவட்டம், பேரையூரைச் சேர்ந்தவர் கார்த்திக் மகள் இலக்கியா. இவர் பேரையூருக்கு அருகிலுள்ள தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்  ஆரம்பத்தில் குறைந்த கட்டணத்தில் கல்வி என்று சொல்லிவிட்டு அடிக்கடி அதிகப்படியான கட்டணத்தை பள்ளி நிர்வாகம் வசூலித்துள்ளது.

இது குறித்து அந்த மாணவியும், அவரது தந்தையும் மாவட்ட மெட்ரிக்குலேஷன் ஆய்வாளரிடம் புகார் செய்துள்ளனர். ஆனால், எந்த நடவடிக்கையுமில்லை. மீண்டும் பள்ளி நிர்வாகம் கூடுதல் கட்டணம் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். அதனால் மதுரையிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளிநிர்வாகம், மாணவி இலக்கியாவை சாதியை சொல்லி இழிவுபடுத்தியதோடு, பள்ளியிலிருந்தும் நீக்கியுள்ளனர்.

சாதியைச் சொல்லி இழிவு: தனியார் பள்ளியை எதிர்த்து மாணவி போராட்டம்!

மத்திய அரசு பிறப்பித்த கட்டாய கல்வி உரிமை சட்டத்தை மீறியும், மாநில அரசு அறிவித்த கல்விக்கட்டணத்தை மதிக்காமலும், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவியை அவமானப்படுத்தி பள்ளியை விட்டு வெளியே அனுப்பியதை கண்டித்தும், இன்று மதுரை, அண்ணா பஸ் நிலையம் அருகே பொதுமக்கள் ஒத்துழைப்புடன் தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு மனித உரிமைகள் கவுன்சில் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில், பாதிக்கப்பட்ட மாணவி இலக்கியா, அவரது தந்தை கார்த்திக், தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு மனித உரிமைகள் கவுன்சில் அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் மணவாளன் ஆகியோர் கலந்து கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படியும், புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத மெட்ரிக் ஆய்வாளரை சஸ்பென்ட் செய்யும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கல்வி கற்கும் உரிமைக்காக ஒரு மாணவியே போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், எல்லோரையும் கல்வி கட்டணக் கொள்ளை பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வைத்துள்ளது.

செ.சல்மான்


படங்கள் : பா.காளிமுத்து