Published:Updated:

அனுமதி பெறாத தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!

Vikatan Correspondent
அனுமதி பெறாத தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!
அனுமதி பெறாத தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனுமதி பெறாமல் நடத்தப்பட இருந்த தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

அனுமதி பெறாத தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!

காஞ்சிபுரம் மாவட்டம் தி.மு.க. நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக செல்வம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தனது முதல் நாள் தேர்தல் சுற்றுப்பயணத்தை நேற்று தொடங்கினார்.

இதற்காக மதுராந்தகம் ஒன்றியத்திலுள்ள ஜமீன் எண்டத்தூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடந்தது. இதில் மாவட்ட செயலாளர் த.மோ.அன்பரசன் வேட்பாளரை அறிமுகப்படுத்திவிட்டு சென்றார். அதைத் தொடர்ந்து மதுராந்தகம் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய நிர்வாகிகளுக்கு வேட்பாளர் செல்வம் சால்வை அணிவிக்க வேண்டும் என்று கூறினார்.

அனுமதி பெறாத தி.மு.க. வேட்பாளர் அறிமுகக் கூட்டம் ரத்து!

அதற்கெல்லாம் நேரம் இல்லை, வேட்பாளர் பல இடங்களுக்கு செல்ல வேண்டும் என உத்திரமேரூர் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர் மறுத்துவிட்டார். சுந்தர் சொல்வதை கேட்காமல் வெளியில் நின்றிருந்த வேட்பாளரை, ஸ்ரீதர் அழைத்துக் கொண்டு நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்துக் கொண்டிருந்தார்.

இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர், 45 நாளுக்கு வேட்பாளர் என்னுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கோபமாக கூறினார். உடனே இந்த தொகுதிக்கு வேட்பாளர் வந்தால் நான் சொல்வது போலத்தான் நடக்க வேண்டும். இங்க வந்து கேட்க நீ யார்? என ஸ்ரீதரன் சொல்ல, இருதரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், மாமண்டூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடக்க இருந்தது. இதற்காக சாலை ஓரங்களில் கொடிக் கம்பங்கள் நடப்பட்டு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. ஆனால், இந்த கூட்டம் அனுமதி பெறாமல் நடத்தப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தாசில்தாருடன் வந்த மாவட்ட ஆட்சியர், கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட்டதோடு, கூட்டம் நடத்துவதற்கும் தடை விதித்து சென்றார்.

செய்தி, படங்கள் பா.ஜெயவேல்