Published:Updated:

மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

Vikatan Correspondent
மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!
மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

மதுரை: மதுரையில் தமிழக விடுதலை படையைச் சேர்ந்த திருச்செல்வம் என்பவரது வீட்டில் நேற்று கைப்பற்றப்பட்ட வெடிகுண்டுகள் செயலிழக்க செய்யப்பட்டது.

மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

மதுரை அவனியாபுரத்தில் தமிழக விடுதலை படையை சேர்ந்த திருச்செல்வம் என்பவரது வீட்டில் 2 பைப் வைடிகுண்டுகள் மற்றும் வெடிபொருள்கள் தயாரிக்க பயன்படும் வெடிபொருள்கள், பவர்ஜெல் பாக்கெட்டுகள், கத்திகள் போன்றவை நேற்று காலை கைப்பற்றப்பட்டன.

மதுரையில் கைப்பற்றபட்ட வெடிகுண்டு செயலிழப்பு!

இதையடுத்து, கைப்பற்றபட்ட 2 பைப் வெடிகுண்டை, மதுரை, மேலூர் மாவட்ட நீதிமன்ற அனுமதி பெற்று, வெடிகுண்டு நிபுணர் சிங்கம் தலைமையில் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார், ஊமச்சிக்குளம் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் இன்று மதியம் 3 மணியளவில் ஒத்தக்கடை அடுத்துள்ள புதுத்தாமரைபட்டி கல்குவாரியில் வைத்து செயலிழக்க செய்தனர்.

இதற்கிடையே, கைது செய்த திருச்செல்வம், தங்கராஜ் என்ற தமிழரசன், மற்றும் கவியரசு என்ற ராஜா மூவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சண்.சரவணக்குமார்

படங்கள்: எபினேசர்