Published:Updated:

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக புதுக்கோட்டை மக்கள் அறிவிப்பு!

Vikatan Correspondent
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக புதுக்கோட்டை மக்கள் அறிவிப்பு!
நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக புதுக்கோட்டை மக்கள் அறிவிப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட காமராசர்புரம் மக்கள் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பரபரப்பை கிளப்பியிருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக புதுக்கோட்டை மக்கள் அறிவிப்பு!

புதுக்கோட்டை, காமராசர் புரம் பகுதிக்கு குடிநீர் கிடைக்கவில்லை, பட்டா வழங்கவில்லை போன்ற குறைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. அத்துட்டன் இந்த பகுதி இதுவரை கணேஷ்நகர் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. அதை காமராசர்புரம் என மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துப்பார்த்தார்கள். இதற்காக அடிக்கடி போராட்டங்களை நடத்தியும் வந்தனர்.

சமீபத்தில் அந்த பகுதிக்கு சென்ற புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரான கார்த்திக்தொண்டைமானை வழிமறித்தவர்கள் அவரை முற்றுகையிட்டனர். வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுகிறது. இதற்கு தீர்வு செல்லுங்கள் என பிடித்துக்கொண்டனர். பிறகு உடனே சரி செய்கிறேன் எனும் வழக்கமான வாக்குறுதிக்கு பிறகு சட்டமன்ற உறுப்பினரை விட்டார்கள்.

இந்த நிலையில் இதுவரை இந்த குறைகள் சரிசெய்யப்படவில்லை. அதோடு அந்த பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடங்கள் இருக்கும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதையும் உடனே சரிசெய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி 'தேர்தலை புறக்கணிக்கிறோம்' என்கிற போஸ்டரை இன்று ஒட்டி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்கள் அவர்கள்.

வீ.மாணிக்கவாசகம்