வானிலை அறிக்கை ரமணனைத் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டார்கள். மழைக் காலம் வந்துவிட்டால், இவர் சொல்லும் வார்த்தைகளே வேதவாக்கு. அடை மழை கொட்டித் தீர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ரமணனைச் சந்தித்தேன். தான் வளர்ந்த மேற்கு மாம்பலத்தின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

'' எனக்குச் சொந்த ஊர் ராமநாதபுரம். ஆனால், நான் வளர்ந்தது எல்லாமே சென்னையில் இருக்கும் மேற்கு மாம்பலத்தில்தான். மாமல்லம் என்பதுதான் மருவி மாம்பலம் என்று ஆயிடுச்சுனு சொல்வாங்க. இன்னைக்கு மழையையும் வெயிலையும் கணிச்சுச் சொல்ற ஒரு வானிலை அறிவிப்பாளனா தமிழகம் முழுக்கத் தெரியிற என்னுடைய தொடக்க கால படிப்பு மேற்கு மாம்பலத்துல இருக்கும் வெங்கட் நிவாஸ் ஸ்கூல்லதான் ஆரம்பிச்சது. இடையில கொஞ்சநாள் மைலாப்பூர்ல இருந்தோம். அதுக்குப் பிறகு, மறுபடியும் மாம்பலத்துக்கே வந்தாச்சு.

சின்ன வயசுல நான் ரொம்பவும் பொறுப்பான, வீட்டுக்கு அடக்கமான புள்ளை. அதனால, எனக்கு நண்பர்கள் வட்டாரமே கிடையாது. நண்பர்கள்கூட சேர்ந்துட்டு செகண்ட்ஷோ சினிமா பார்த்த அனுபவம் எல்லாம் எனக்கு வாய்க்காமலே போயிடுச்சு.

90-களில் நான் பார்த்த வெஸ்ட் மாம்பலத்துக்கும் இப்போ நான் இருக்கும் வெஸ்ட் மாம்பலத்துக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே கிடையாது. அப்போ அக்மார்க் கிராமத்தைப்போல இருக்கும். நகரமயமாதல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் எனக்கு மாம்பலத்தைப் பார்த்தால்தான் தெரியுது. எங்கே பார்த்தாலும் மரங்கள் சூழ்ந்து, வெயிலே படமால் குளுகுளுன்னு இருக்கும். இப்போ அந்த மரங்கள் எல்லாம் எங்கே போச்சுன்னே தெரியலை.

அயோத்தியா மண்டபத்துல வருஷம் முழுக்கவே இசைக் கச்சேரி நடந்துட்டே இருக்கும். நேரம் கிடைக்கும்போது எல்லாம் அங்கே போய் உட்கார்ந்துடுவேன். அதேபோல காசி விஸ்வநாதர் கோயில் என் மனசுக்குப் பிடிச்ச கோயில். எந்தக் கவலை இருந்தாலும் காசி விஸ்வநாதர் கோயிலுக்குப்போய் 10 நிமிடம் கண்ணை மூடி உட்கார்ந்தா போதும்... கவலை எல்லாம் காணாமல் போயிடும்.

மாம்பலம் ஏரியாவுல இருக்கும் ஏழை மக்களுக்கு, மருத்துவ சேவைச் செய்வதற்கு பப்ளிக் ஹெல்த் சென்டர்னு ஒரு அமைப்பு கடந்த 60 வருடங்களாகச் செயல்பட்டு வருது. வி.சி. சுப்ரமணியன்கிற ஒரு காந்தியவாதிதான் இந்த அமைப்பை ஆரம்பிச்சாரு. இன்றைக்கு எவ்வளவோ ஏழை மக்கள் அந்த ஹெல்த் சென்டர் மூலமாகப் பயனடைந்துவராங்க.

ஒரு காலத்துல சினிமாக்காரங்க பலரும் எங்க ஏரியாவுலதான் இருந்தாங்க. இளையராஜாகூட வெஸ்ட் மாம்பலத்துலதான் ரொம்ப வருஷம் இருந்திருக்காரு. கிரிக்கெட் வீரர் அஸ்வின் எங்க தெருவுக்குப் பக்கத்துத் தெருவுலதான் இருக்காரு. வெஸ்ட் மாம்பலம் முழுக்கத் தெருவுக்குத் தெரு சின்னச் சின்ன மெஸ் இருக்கும். ஒவ்வொரு மெஸ்லேயுமே சாப்பாடு அவ்வளவு பிரமாதமா இருக்கும்.

சென்னையோட ஷாப்பிங் பகுதியான தி.நகரும் மாம்பலமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மாதிரி பக்கத்துலயே இருக்கும். மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன்ல இறங்கி ஒரு பக்கம் போனால் மாம்பலம்... இன்னொரு பக்கம் போனால் தி.நகர். தீபாவளி, பொங்கல் சமயத்துல ஏரியாவுல கால் வைக்க முடியாத அளவுக்குக் கூட்டம் அலைமோதும்.

என் மூச்சோடு கலந்த ஊராக மாம்பலம் மாறிடுச்சு. எங்கே போனாலும் திரும்ப எப்போ மாம்பலத்துல கால் வைப்போம்னுதான் மனசு ஏங்கும். அந்த அளவுக்கு நான் மாம்பலத்தை நேசிக்கிறேன்''

- பி.செ.விஷ்ணு

படங்கள்: செ.நாகராஜன்

ரமணனின் மனைவி மதுமதி, வங்கி ஊழியர். மகள் நிவேதிதாவுக்கு திருமணமாகி சுவிட்சர்லாந்தில் வசித்து வருகிறார். மகன் அரவிந்தாக்ஷன் டெல்லி ஐ.ஐ.டி.யில் படித்து வருகிறார்.