Published:Updated:

பாலியல் தொல்லை: 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு!

பாலியல் தொல்லை: 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு!
பாலியல் தொல்லை: 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு!

பாலியல் தொல்லை: 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு!

விருதுநகர்: பாலியல் தொல்லை காரணமாக 9 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் தீக்குளித்திருப்பது விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் தொல்லை: 9ம் வகுப்பு மாணவர் தீக்குளிப்பு!

விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையிலுள்ள ஏ.பி.டி. காம்பவுண்ட் பகுதியைச் சேர்ந்த டிங்கர் தொழிலாளி மாசிலாமணியின் மகன் அஜித்குமார். இவர், அப்பகுதியிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பகுதியில் வசிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் அஜித்குமாருக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்நிலையில், நேற்று பள்ளிக்கு சென்ற அஜித்குமாருக்கு அவர்கள் மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனால், மனமுடைந்த அஜித்குமார், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியதும் தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து, உடலில் 98 சதவிகித தீக்காயங்களுடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அஜித்குமார் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து விருதுநகர் டவுன் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எம்.கார்த்தி

படம்:
ஆர்.எம்.முத்துராஜ்

அடுத்த கட்டுரைக்கு