Published:Updated:

கருணாநிதி கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஜெ. முடக்குகிறார்: கி.வீரமணி

நாகர்கோவில்: கருணாநிதி கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஜெயலலிதா முடக்குவதால் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தி.க. தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டியுள்ளார்.

நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் அருகில் தேர்தல் நடந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட கி.வீரமணி, தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

கருணாநிதி கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஜெ. முடக்குகிறார்: கி.வீரமணி

அப்போது அவர் பேசுகையில், ''கலைஞர்தான் மதவாத அரசு அமைவதை எதிர்த்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியை உருவாக்கினார். அவர் சுட்டிக்காட்டுபவர்தான் நாளைய இந்தியாவின் பிரதமராக டெல்லியில் அமரப்போகிறார்.

பெண்கள் பாதுகாப்புக்கு திட்டங்களையும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களையும் கொண்டு வந்தவர் கலைஞர். அதை தடுத்து நிறுத்தியவர் ஜெயலலிதா. இதனால் அரசுக்கு பலகோடி ரூபாய் இழப்பு. கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்பதால் அதை தடுத்து நிறுத்துகிறார் ஜெயலலிதா. அப்படியென்றால் எம்.ஜி.ஆர். கொண்டு வந்த திட்டம் என்பதால் சத்துணவு திட்டத்தை தடுத்து நிறுத்தினாரா இல்லையே...! கலைஞர் செய்ததில் ஜனநாயகம் இருக்கிறது. ஜெயலலிதா செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது?

கருணாநிதி கொண்டு வரும் நல்ல திட்டங்களை ஜெ. முடக்குகிறார்: கி.வீரமணி

2001ஆம் ஆண்டு சேது சமுத்திரத்திட்டம் வேண்டும் என்று கூறியவர், அதையடுத்து தி.மு.க. ஆதரித்து செயல்படுத்தப் போகும் திட்டம் என்பதால் ராமர் பாலத்தை இடித்து இந்துக்களுக்கு துரோகம் செய்யமாட்டேன் என்று சேது சமுத்திர திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தடையை வாங்கினார்.

தற்போது சூறாவளியாய் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ஜெயலலிதா, ராமநாதபுரத்தில் ஒரு வார்த்தைகூட ராமர்பாலத்தைப் பற்றி வாய்திறக்கவே இல்லையே?. ராமநாதபுரம் அ.தி.மு.க. வேட்பாளர் ஒரு இஸ்லாமியர். அதனால் ராமர் பாலத்தைப் பற்றிப் பேசினால தனது முகமூடி கிழிந்து விடும் என்றுதான் பேசவில்லை.

எனவே, மக்கள் நலனுக்காக மீண்டும் நல்ல திட்டங்களை கொண்டு வர தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்'' என்றார்.

ச.காளிராஜ்

படங்கள்: ரா.ராம்குமார்