Published:Updated:

ராமநாதபுரம் தொகுதி: பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்!

ராமநாதபுரம்: பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசார பணிகள் ராமநாதபுரம் தொகுதியில் உள்ள கீழக்கரையில் துவக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் தொகுதி: பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வாக்காளர் விழிப்புணர்வு பிரசாரம்!

தமிழகத்தில் இம்மாதம் 24 ஆம் தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் குறித்த விழிப்புணர்வை வாக்காளர்களுக்கு ஏற்படுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி தலைவருமான நந்தகுமாரின் உத்தரவின் பேரில் வாக்காளர்களுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2009 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 1,091 வாக்குசாவடிகளில் 64 சாவடிகளில் 50 சதவிகிதத்திற்கு குறைவான வாக்குகள் பதிவானது. கீழக்கரை நகராட்சியில் மட்டும், 35 வாக்குசாவடிகளில் 16ல் 50 சதவிகித வாக்குகளே பதிவாகியிருந்தது. இதனை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் உள்ள 12,809 மகளிர் சுய உதவி குழுவினை சேர்ந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு பிரசார பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளிலும் உள்ள வாக்காளர்களை சந்திக்க ஒவ்வொரு வார்டுக்கும் 15 பெண்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் உள்ள 315 பெண்களும், நாள் ஒன்றுக்கு 100 வீடுகள் வீதம் நகராட்சி பகுதியில் உள்ள 8,925 வீடுகளுக்கும் சென்று வாக்களர் விழிப்புணர்வு பிரசார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கலைக் கல்லூரி மாணவிகள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வு தொண்டு நிறுவன பணியாளர்கள் உள்ளிட்ட பெண்கள் 3 நாட்களுக்கு இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்துகின்றனர்.

பெண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த வாக்காளர் விழிப்புணர்வு பரசார பணிகளுக்கு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இரா.மோகன்

படம்:
உ.பாண்டி