Published:Updated:

தொடரும் மக்கள் முற்றுகை: சங்கடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை!

கரூர்: வாக்கு கேட்டு சென்ற அ.தி.மு.க. வேட்பாளர் மற்றும் அவரது வாகனங்கள் தொகுதி மக்களால் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் விராலிமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளரான தம்பிதுரை விராலிமலைக்கு வாக்கு கேட்டு சென்றார். அப்போது, அவரை சூழ்ந்து கொண்ட அப்பகுதி மக்கள், ''குடிநீர் இல்லாமல் நாங்களே அல்லாடிக் கொண்டிருக்கிறோம். இங்க வந்து ஓட்டு கேட்கிறாயா?" எனக் கூறி அவரை வழி மறித்திருக்கிறார்கள்.

பொதுமக்களின் இந்த மறியலால் திகைத்துபோன தம்பிதுரை மற்றும் அவரது ஆதரவாளர்கள், என்ன செய்வதென்று புரியாமல் விழித்தபடி இருந்துள்ளனர். இந்த தொகுதியில் வேட்பாளர் தம்பிதுரை மறிக்கப்படுவது இது இரண்டாவது முறை.

இரண்டு வாரங்களுக்கு முன் பிரசாரத்திற்கு இங்கு வந்த தம்பிதுரையிடம், தங்கள் குடிநீர் பிரச்னையை கூறி தீர்வு கேட்டுள்ளனர் அங்குள்ள மக்கள். அப்போது, ''இன்னும் இரண்டு நாட்களில் உங்கள் பகுதியில் போர் போட்டு குடிநீர் ஏற்பாடு செய்கிறோம்" என உறுதியளித்தார் தம்பிதுரை. ஆனால், உறுதியளித்தபடி எந்த நடவடிக்கையையும் அவர் எடுத்ததாக தெரியவில்லை.

அதைதொடர்ந்து, நேற்று திரும்பவும் பிரசாரத்திற்கு வந்தபோது அப்பகுதி மக்கள் குடிநீர் பிரச்னை பற்றி கேட்டுள்ளனர். அதற்கு அவர், மீண்டும் முன்பு சொன்ன பதிலையே சொல்லி இருக்கிறார். இதில் கடுப்பான அப்பகுதி மக்கள்,  ''அன்றைக்கும் இதையேத்தான் சொல்லிவிட்டு சென்றீர்கள். இன்றைக்கும் அதே பதிலை தான் சொல்கிறீர்கள்!" என்று கோபமாக கேட்டபடி, அவரை முற்றுகையிட்டுள்ளனர். வேறு வழியின்றி பல காரணங்களை சொல்லி அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பி போயிருக்கிறார்.

தொகுதிப் பக்கம் தலைகாட்டாத எம்.பி. என்ற அவப்பெயர் தனக்கிருக்கும் நிலையில், இப்போது போகும் இடங்களில் எல்லாம் மக்களின் மறியல் அவரை வெகுவாகவே சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேபோல் தம்பிதுரை, காசு செலவழிப்பதில்லை என்று கட்சியினர் ஒருபுறம் அதிருப்தியில் இருக்கின்றனர்.

மீறி தேர்தல் செலவுக்கு பணம் கேட்டால், ''நான் அம்மாவோட கேன்டிடேட். அம்மாவே இங்க போட்டி போடுற மாதிரி. என்கிட்டயே காசு கேக்குறீங்களா?" என கூறி வருகிறாராம். தொகுதி பொறுப்பாளரான அமைச்சர் விஜயபாஸ்கர்தான் மக்களின் கோபத்தில் இருந்தும், கட்சியினரின் எதிர்ப்புகளிலிருந்தும் தற்காலிகமாக தம்பிதுரையை பாதுகாத்து வருவதாக அக்கட்சியினர் புலம்பி வருகின்றனர்.

வீ.மாணிக்கவாசகம்