Published:Updated:

விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி விளாசல்

Vikatan Correspondent
விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி விளாசல்
விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி விளாசல்

நாகர்கோவில்: விஜயகாந்த்துக்கு டாஸ்மாக், சைடிஷ் இதுதான் தெரியுது என்று நாகர்கோவிலில் பிரசாரம் செய்த அனிதாகுப்புசாமி கடுமையாக விமர்சித்து பேசினார்.
 

விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி விளாசல்

நாகர்கோவில் அ.தி.மு.க வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து அனிதாகுப்புசாமி நேற்றிரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அனிதா குப்புசாமி, "நான் சென்ற இடத்துல எல்லாம் மக்கள் திரள்திரளா வாராங்க காரணம் புரட்சித்தலைவி அம்மா மீது அவங்க வச்சிருக்கிற பற்றும், அம்மா அவங்களுக்கு செய்து வரும் நலத்திட்டங்களும்தான். அனைத்து மக்களுக்கும், அனைத்து கட்சிக்காரங்களுக்கும் கூட பாகுபாடின்றி கூட திட்டங்களை செயல்படுத்துறாங்க. அதுல பெரும்பாலான பலன்களை அடைந்தவர்கள் ஏழைப் பெண்கள் மற்றும் குழந்தைகள்தான். என்னடா குழந்தைகளையும் சொல்லுறேன்னு பார்குறீங்களா...?

தமிழ்நாட்டு குழந்தைகலெல்லாம் பாவம். அவங்களுக்கெல்லாம் அரசியல் தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சது ஒண்ணே ஒண்ணுதான். இரட்டை இலை சின்னம். அம்மாவோட சின்னம். அதனால, அம்மா, அப்பாட்ட அதுக்கு வாக்களியுங்கன்னு சொல்றாங்க. காரணம் இலவச சீருடை, புத்தகம், காலணி, லேப்டாப் எல்லாம் புரட்சித் தலைவி அம்மா கொடுத்ததுன்னு அவர்களுக்கு தெரிஞ்சதாலத்தான். முன்பெல்லாம் சென்னையில உள்ள சிக்னல்களில் நிறையபேர் பசி கொடுமையால மற்றவர்களிடம் கையேந்தி நிற்பாங்க. ஆனா, இப்ப அவங்க கம்பீரமா நின்னு சாப்பிடுறாங்க, காரணம் அம்மா உணவகம்தான். இப்ப சென்னை சிக்னல்ல யாரும் பிச்சை எடுக்குறது இல்ல. கர்நாடகம், ராஜஸ்தான் போன்ற வடக்கத்துகாரங்க தெற்கத்து காரங்கலெல்லாம் அம்மா உணவகத்தை பார்த்துட்டு மூக்கு மேல விரல வச்சுட்டு போயி அவர்கள் மாநிலத்திலயும்ட திறக்க முயற்சிக்குறாங்க. அது தான் நம்ம அம்மா.
 

விஜயகாந்த்துக்கு தெரிந்தது டாஸ்மாக், சைடிஷ்தான்: அனிதாகுப்புசாமி விளாசல்

ஊழல்ன்னு சொன்னாலே தி.மு.க.தான். மத்தியில எந்த தேசிய கட்சி வந்தாலும் உடனே போயி சேர்ந்துட்டு, தங்களோட குடும்ப நலத்திற்காகவும், மத்திய அமைச்சர் பதவிக்காகவும் ஜால்ரா போடுவாங்க. ஸ்டாலின் இப்ப கிளம்பியிருக்காரு. பொது மேடையில அம்மாவோட விவாதிக்க தயாரான்னு. நான் சொல்லுறேன் தி.மு.க.வில் ஸ்டாலின் மட்டும்தான் தளபதி. ஆனா, அ.தி.மு.க.வில் தொண்டர்கள் அனைவரும் தளபதிகள். அனைவரும் அம்மாவின் பிள்ளைகள். அதனால ஸ்டாலினின் விவாதத்திற்கு நாமதான் பதில் சொல்லனும். நம்ம அம்மாவுக்கு வேற வேலையில்லையா? இவரோட விவாதம் செய்யுறதுதான் வேலையா?

அப்படியாவது தன்னோட பேச்சைக் கேட்க கூட்டம் வராதான்னு ஏங்குறாரு. தி.மு.க செத்த பாம்பு போல வீரமிக்க தமிழன் எவனாவது செத்த பாம்பை அடிப்பானா. அழகிரி சொல்லுறாரு தி.மு.க இந்த தேர்தல்ல தோற்கும்ன்னு, உண்மைதான் டெபாசிட் கூட கிடைக்காமல் தோற்கும் என்பதை சொல்ல மறந்துட்டாரு.

இன்னொரு அம்மா கிளம்பியிருக்காங்க பிரேமலதா. அம்மா உணவகத்தை ’சைடிஷ்’ கடைன்னு சொல்லியிருக்காங்க. விஜயகாந்த் - பிரேமலதா இவங்களுக்கு எப்பயும் டாஸ்மாக், சைடிஷ் இதுதான் தெரியுது எல்லா இடத்துலயும். விஜயகாந்த்துக்கு தொப்பை விழுந்துட்டு. அதான் இனி நடிக்க முடியாதுன்னு அரசியலுக்கு வந்திட்டாரு. அவர அம்மாதான் எதிர்க்கட்சி தலைவராக ஆக்கினாங்க. அந்த நன்றி கூட இல்லாம அம்மாவ பத்தி பேசுகிறார். ஊழலை ஒழிப்பேன்னு சொல்லுறவரு சிங்கப்பூர், அமெரிக்கான்னு போயி கூட்டணிக்கு பேரம் பேசுறாரு. இவரு எப்படி ஊழல ஒழிப்பாரு. அம்மாதான் ஊழலை ஒழிக்க கூடிய தலைவி. அதனால நாம அனைவரும் அம்மாவ பிரதமராக்கிடணும்" என்று முடித்தார்.

ச.காளிராஜ்

படங்கள்:
ரா.ராம்குமார்