Published:Updated:

புதுச்சேரியில் பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் கழுத்தறுத்து கொலை!

Vikatan Correspondent
புதுச்சேரியில் பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் கழுத்தறுத்து கொலை!
புதுச்சேரியில் பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் கழுத்தறுத்து கொலை!

புதுச்சேரி: புதுச்சேரியில் பட்டப்பகலில் நகைக்கடை உரிமையாளர் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ராமினிவாஸ் என்ற பெயரில் அடகுக்கடை மற்றும் நகைக்கடையை ராஜேஷ் ஷாம் என்பவர் நடத்தி வந்தார். இன்று காலை 11 மணி அளவில் அவரது கடைக்கு வந்த மர்ம நபர்கள் நகைகளை அடகு வைப்பது போல் வந்துள்ளனர். அப்போது, பணம் எடுக்க ராஜேஷ் சென்றபோது, மர்ம நபர்கள் அவரை பின் தொடர்ந்து கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததோடு, நகைகளையும் கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து தகவல் அறிந்து உருளையன்பேட்டை காவல்துறையினர் விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகள்,  கொள்ளையடிக்கப்பட்டுள்ள நகைகள் அனைத்தும் பொதுமக்களுக்கு சொந்தமானவை. 24 மணி நேரத்தில் காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்கவில்லையென்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

இந்த படுகொலை கண்டிக்கும் விதமாகவும், நகைகளை கண்டுபிடிக்கும் வரை அனைத்து நகை மற்றும் அடகுக்கடைகள் மூடப்படும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

நா.இள.அறவாழி