Published:Updated:

இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாள்கிறது காங்கிரஸ்: ராம் ஜெத்மலானி

Vikatan Correspondent
இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாள்கிறது காங்கிரஸ்: ராம் ஜெத்மலானி
இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாள்கிறது காங்கிரஸ்: ராம் ஜெத்மலானி

மதுரை:

இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாள்கிறது காங்கிரஸ்: ராம் ஜெத்மலானி

இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாள்கிறது காங்கிரஸ் என்று ராம் ஜெத்மலானி கூறினார்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் வைகோவுக்கு வாக்கு சேகரிக்க பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி இன்று மதுரை வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசும்போது, ''காங்கிரஸ் கட்சி நின்ட காலம் ஆட்சியிலிருந்து நாட்டை மிகவும் பின்னுக்கு தள்ளிவிட்டது. எல்லாவற்றிலும் ஊழல் நிறைந்துவிட்டது. இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும்.

இந்துக்களையும், முஸ்லீம்களையும் பிரித்தாளும் அரசியல் செய்கிறது காங்கிரஸ். அதனால் தான், டெல்லி இமாம் முஸ்லிம்கள் காங்கிரசை ஆதரிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இந்தியாவிலேயே முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ்வதும், அதிகம் படித்தவர்கள், பணக்காரர்கள் இருப்பதும் குஜராத்தில்தான். இதை சச்சார் கமிட்டியே பதிவு செய்திருக்கிறது. குஜராத் கலவரத்துக்கு மோடி மேல் பழிபோடுவது காங்கிரஸ் செய்யும் பொய் பிரசாரம்தான். எனவே, எல்லோரும் பா.ஜ.க.வை ஆதரிக்க வேண்டும்" என்றார்.

செ.சல்மான்