Published:Updated:

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் விவசாயிகள் தீர்மானம்!

Vikatan Correspondent
பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் விவசாயிகள் தீர்மானம்!
பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் விவசாயிகள் தீர்மானம்!

செங்கல்பட்டு: பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் விவசாயிகள் தீர்மானம்!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களின் சார்பாக, செங்கல்பட்டில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. இதற்கு, காஞ்சிபுரம் மாவட்ட பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர் மு.மணி தலைமை தாங்கினார். இதில், காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்போர் சங்கதலைவர் பா.மாசிலாமணி, இந்திய பசுமை தீர்பாயத் தலைவர் ஜோதிமணி உட்பட மாவட்டம் முழுவதிலிருந்தும் பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

பாலாற்றில் தடுப்பணைகள் கட்ட வேண்டும்: காஞ்சிபுரம் விவசாயிகள் தீர்மானம்!

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் சுமார் 220 கி.மீ பாய்ந்து செல்லும் பாலாற்றில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஈசூர்-வல்லிபுரம் மற்றும் திருமுக்கூடல்-பழையசீவரம் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டவேண்டும். மூன்று அடிக்குமேல் பாலாற்றில் மணல் அள்ளக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்ற வேண்டும். நீர்வரத்து வாய்க்கால்கள், ஏரி, குளம், ஆற்றங்கரைகள் போன்ற நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை மீட்டு பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மாநியங்களை நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வழங்க வேண்டும். ஏரிகளில் காணப்படும் அதிக நீரை உறிஞ்சும் வேலிகாத்தான் மற்றும் கருவேல மரங்களை அகற்றி விவசாயிகளுக்கு பலன் தரும் மரங்களை நட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்துப்போய் உள்ளதால் மாவட்டம் முழுக்க வரண்ட நிலை நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நவீன குளிரூட்டப்பட்ட சேமிப்பு கிடங்குகளை அமைத்துக் கொடுக்க வேண்டும். இலவச மண் பரிசோதனை, இலவச தண்ணீர் பரிசோதனை போன்றவற்றை கிராமத்திற்கே செல்லும் நடமாடும் பரிசோதனைக் மையங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பா.ஜெயவேல்

படங்கள்:
க.பாலாஜி