Published:Updated:

மு.க.ஸ்டாலின் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன்?: நடிகர் சரத்குமார் கேள்வி!

Vikatan Correspondent
மு.க.ஸ்டாலின் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன்?: நடிகர் சரத்குமார் கேள்வி!
மு.க.ஸ்டாலின் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன்?: நடிகர் சரத்குமார் கேள்வி!
மு.க.ஸ்டாலின் காங்கிரஸை விமர்சிக்காதது ஏன்?: நடிகர் சரத்குமார் கேள்வி!

விருதுநகர்: மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசை மு.க. ஸ்டாலின் விமர்சிக்காதது ஏன் என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் நடிகர் சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தபோது, ''மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு நாட்டுக்கு பெரும் பொருளாதார வீழ்ச்சியைத் தந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் மூலம் 200 மெகா வாட் மின்சாரம் தமிழகத்துக்கு தருவோம் என உறுதியளித்த மத்திய அரசு, தி.மு.க.வுடன் கை கோர்த்துக் கொண்டு மின்சாரம் தர மறுக்கிறது.

விலைவாசி உயர்வு பற்றி பேசும் மு.க.ஸ்டாலின் பலமுறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதை பட்டியலிட்டு சொல்வாரா?. ஏனென்றால், அதற்கு தி.மு.க. எம்.பி.க்களும் ஆதரவளித்து கையெழுத்திட்டுள்ளனர். ஆனால், தமிழகத்தில் கூட்டுறவு அங்காடிகள் மூலம் பொருள்களை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குகிறார் ஜெயலலிதா.

பா.ம.க.வும், தே.மு.தி.க.வும் சுயலாபத்துக்காக சந்தர்ப்பவாதக் கூட்டணி அமைத்துள்ளன. தொலைநோக்குத் திட்டங்கள் மூலம் தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்து, 40 வேட்பாளர்களையும் வெற்றிபெறச் செய்யவேண்டும்" என்றார்.