Published:Updated:

என்னை தோற்கடிக்க கேரளாவில் இருந்து பல கோடி ரூபாய் வந்துள்ளது: வைகோ 'திடுக் ' தகவல்

Vikatan Correspondent

ராஜபாளையம்: நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தோற்கடிக்க, கேரளாவில் இருந்து பல கோடி ரூபாய் இங்கு வந்துள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தென்காசி நாடாளுமன்ற தொகுதியின் ம.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து ராஜபாளையம் ஜவகர் மைதானத்தில்  வைகோ பேசும்போது, ''இந்தியாவை ஆளுகின்ற தகுதி நரேந்திரமோடிக்கு மட்டுமே உண்டு. சாதி, மதம் பார்க்காமல் அனைவரையும் மோடி அரவணைத்துச் செல்வார்.

என்னை தோற்கடிக்க கேரளாவில் இருந்து பல கோடி ரூபாய் இங்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது யாருடைய கஜானாவுக்கு செல்கிறது என்று புலனாய்வுத்துறை விசாரிக்க வேண்டும். தேநீர் மட்டும் அருந்திவிட்டு வாக்கு சேகரிக்கும் ஆட்கள் எங்களிடம் இருக்கிறார்கள். அவர்களை பார்த்து நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் வேட்பாளர் ஒழுக்கமானவர், நேர்மையானவர், யாருக்கும் விலை போகமாட்டார். எங்களது கூட்டணியின் அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மோடி நிச்சயம் பிரதமராக வருவார்" என்றார்