Published:Updated:

எந்த கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்டது பா.ஜ.க. கூட்டணி: சரத்குமார்

Vikatan Correspondent
எந்த கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்டது பா.ஜ.க. கூட்டணி:  சரத்குமார்
எந்த கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்டது பா.ஜ.க. கூட்டணி: சரத்குமார்

தேனி: எந்தவித கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்டதுதான் பா.ஜ.க. கூட்டணி என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

எந்த கொள்கையும் இல்லாமல் உருவாக்கப்பட்டது பா.ஜ.க. கூட்டணி:  சரத்குமார்

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தேனி நாடாளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளார் கூழையனூர் ஆர்.பார்த்திபனை ஆதரித்து தேனியில் பிரசாரம் செய்தபோது, ''காங்கிரஸ் கூட்டணியில் பத்தாண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்து, தமிழகத்தை வஞ்சித்த தி.மு.க. தற்போது உங்களை தேடி வாக்குகள் சேகரிக்க வருகிறது. பா.ஜ.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. கூட்டணி ஒரு சந்தர்பவாத கூட்டணி.

கடந்த 33 மாத ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் தேர்தலில் கொடுத்த 177 வாக்குறுதிகளில் 159 வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். மத்தியில் கொடுக்கப்படும் அதிகாரங்களை, மாநிலங்கள் எங்கும் பகிர்ந்தளிக்க மத்தியில் ஒரு வலுவான ஆட்சி அமைய வேண்டும். அது நம் புரட்சித் தலைவி சுட்டிக்காட்டும் ஆட்சியாக இருக்க வேண்டும். அதற்கு நாம் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும்.

தே.மு.தி.க. தலைவர் முதலில் ஆண்டவனிடமும், மக்களிடமும் தான் கூட்டணி என்றார். அதன்பிறகு, தனது தலமையிலான கூட்டணி என்றார். தற்போது, ஏதோ ஒரு அலை வீசுகிறது, அந்த அலையில் வெற்றி பெற்று தன்னுடைய மைத்துனரை அமைச்சராக்கிவிடலாம் என்ற சுயநலத்தில் இந்த கூட்டணியில் சேர்ந்திருக்கிறார்.

எந்த கொள்கையும் இல்லாமல், எந்த தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் உருவாக்கப்பட்ட கூட்டணி அந்த கூட்டணி. அதேபோல், தமிழகத்தில் எந்தவொரு அலையும் வீசவில்லை.

புரட்சித் தலைவி, விவசாயத்திற்காக போராடியவர், முல்லை பெரியாறு பிரச்னைக்காக தொடர்ந்து போராடி வருகின்றார். நீங்கள் வாக்களிக்க செல்லும்போது உங்களுடைய வருங்கால சந்ததியை நினைத்து வாக்களியுங்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய புரட்சிதலைவி அறிவித்த வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்" என்றார்.

உ.சிவராமன்

படம்:
சக்தி அருணகிரி