Published:Updated:

40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

Vikatan Correspondent
40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்
40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

சுசீந்திரம்: அ.தி.மு.க. 40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதாதான் பிரதமர் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

அ.தி.மு.க. வேட்பாளர் ஜான் தங்கத்தை ஆதரித்து பண்ருட்டி ராமசந்திரன் சுசீந்திரம் கூட்டத்தில் பேசும்போது, ''இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. நாற்பது தொகுதிகளையும் கைப்பற்றினால், புரட்சித்தலைவி பிரதமராக வருவார். காவிரி நீர், முல்லைப் பெரியாறு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது, கச்சத்தீவுப் பிரச்னை, ஈழத்தமிழர் பிரச்சனை என தமிழகத்திற்குத்தான் மற்ற மாநிலங்களைவிட பிரச்னைகள் அதிகம் உள்ளது. அதை நிரந்தரமாக தீர்த்து வைக்க, டெல்லியின் அதிகாரத்தில் நாம் பங்கெடுக்க வேண்டும்.

40 தொகுதிகளையும் கைப்பற்றினால் ஜெயலலிதா பிரதமர்: பண்ருட்டி ராமச்சந்திரன்

ஜார்கண்ட் மாநிலத்தில் மதுகோடா என்ற ஒரு எம்.எல்.ஏ. எப்படி முதல்வரானாரோ அதுபோல நாற்பது தொகுதிகளை கைப்பற்றினால் பிரதமர் என்ற பதவியும் சாத்தியமாகும். பத்து ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. தமிழர் நலன்கள், உரிமைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகள் இருந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பஞ்சாயத்து தேர்தலுக்கும், பார்லிமெண்ட் தேர்தலுக்கும் வித்தியாசம் தெரியாதவர். அவருடன் இருந்து ஏன் கடைசி காலத்தை வீணடிப்பானே என்றுதான் அ.தி.மு.க.விற்கு வந்துவிட்டேன். தி.மு.க. தலைவர் கருணாநிதியோ, பிரபாகரன் கொல்லப்பட்ட அன்று காங்கிரசிடம் தனது மகனுக்கு மத்திய அமைச்சரவையில் இலாகாவை கேட்டுக்கொண்டிருந்தார். தமிழக மக்கள் இலங்கையில் நடந்த படுகொலையை டி.வி.யில் பார்த்து ரத்த கண்ணீர் விட்டுக்கொண்டிருக்க, பதவி சுகம் கேட்கிறது கருணாநிதிக்கு.

அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகளுக்கெல்லாம் பெருச்சாளி சின்னம் கொடுத்திடலாம். ஏனென்றால், பெருச்சாளிதான் கிடைத்ததை எல்லாம் தனது வளையில் கொண்டு போய் வைத்துக்கொள்ளும். பொதுநலமின்றி சுயநலம் கொண்டு திரியும் கட்சிகளுக்கெல்லாம் இனி பெருச்சாளி சின்னம்தான் பொருந்தும்" என்றார்.

ச.காளிராஜ்

படங்கள்:
ரா.ராம்குமார்