Published:Updated:

காங்கிரஸ் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன்

Vikatan Correspondent
காங்கிரஸ் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன்
காங்கிரஸ் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன்

நாகர்கோவில்: காங்கிரஸ் கட்சியின் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது என்று தேர்தல் பிரசாரத்தின்போது ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

காங்கிரஸ் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன்

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரை ஆதரித்து, மத்திய கப்பல்த் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பிரசாரம் செய்தபோது, ''தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். காங்கிரஸ் தனித்து விடப்படவில்லை கன்னியாகுமரி மக்கள் துணை இருக்கிறார்கள்.

காங்கிரஸ் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது: ஜி.கே.வாசன்

காங்கிரசின் பாதை வெற்றிப்பாதை, அதை யாராலும் தடுக்க முடியாது. தமிழகத்தில் நான்கு விதமான கூட்டணிகள் அமைந்துள்ளன. அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள் யார் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லத் தெரியாமலே தேர்தலில் போட்டியிடுகின்றன. கம்யூனிஸ்டுகளுக்கோ இறங்கு முகம் தான். இனி ஏறுமுகம் என்பது அவர்களுக்கு கிடையாது. 2004, 2009 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க.வை மக்கள் இல்லாமல் ஆக்கினார்கள். இந்த தேர்தலிலும் அதே நிலைதான் அவர்களுக்கு ஏற்படும்.

இந்தியாவில் நிலையான மதசார்பற்ற ஆட்சி அமைந்திட வேண்டும் என்றால் அது சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். இந்த தேர்தல் சட்டமன்றத் தேர்தலோ, பஞ்சாயத்து தேர்தலோ கிடையாது. மத்தியில் நிலையான ஆட்சி அமைத்து, அனைத்து மதங்களும் ஒன்றுபட்டு இருந்திட, நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு உங்களைத் தேடி வருபவர்களைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல்.

அதனால், தமிழ்நாடு வளர்ச்சிப் பெற்றிட, இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப்பெற்றிட, மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிட காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களியுங்கள்" என்றார்.

ச.காளிராஜ்

படங்கள்:
ரா.ராம்குமார்