Published:Updated:

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!
சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ்!

விருதுநகர்: சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தை திரும்ப பெற்றுக் கொண்டனர்.

பட்டாசு ஆலைகளுக்கான உரிமக் கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 66 ஆயிரம் ரூபாயாகவும், சேமிப்பு கிடங்குகளுக்கான கட்டணத்தை 15 ஆயிரம் ரூபாயில் இருந்து நான்கு லட்சம் ரூபாயாகவும் மத்திய அரசு அண்மையில் உயர்த்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆலை உரிமையாளர்கள் மத்திய அரசு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி கடந்த 6ஆம் தேதி முதல் காலவரம்பற்ற வேலை‌நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்தனர்.

இதனிடையே, பட்டாசு ஆலைகள் மீதான மத்திய அரசின் கட்டண உயர்வை கண்டித்து சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் நேற்ற முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், தொழிலாளர்களின் நலன் கருதி தங்களது போராட்டத்தை  திரும்ப பெற்றுக் கொள்வதாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் இன்று அறிவித்துள்ளனர். சிவகாசியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.