Published:Updated:

ஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்!

Vikatan Correspondent
ஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்!
ஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்!

ராமேஸ்வரம்: ஒரே நாளில் 7 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்த சென்ற காட்சியைப் பார்த்து சுற்றுலா பயணிகள் பரவசமடைந்தனர்.

ஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்!

நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள துறைமுகங்களில் இருந்து தென்பகுதி துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்கள் பாக் ஜலசந்தி, பாம்பன் பாலம் வழியாக வங்க கடலில் பயணித்து வருகின்றன. இந்த கப்பல்கள் காற்றின் வேகம், ரயில் செல்லும் நேரம் போன்ற நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே பாம்பன் பாலத்தை கடக்க அனுமதிக்கப்படுகின்றன. இதனால் பாலத்தை கடப்பதற்காக கப்பல்கள் சில நாட்கள் காத்து கிடக்கும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், இன்று ஒரே நாளில் மட்டும் 7 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து வெவ்வேறு துறைமுகங்களுக்கு சென்றன. மும்பை துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 ரோந்து கப்பல்கள் இன்று மாலை பாம்பன் பாலத்தை கடந்து விசாகப்பட்டினத்திற்கு சென்றன. விசாகப்பட்டினம் செல்லும் வழியில் குடிநீர் மற்றும் எரிபொருள் நிரப்புவதற்காக இந்த 3 ரோந்து கப்பல்களும் ராமேஸ்வரம் கடற்படை துறைமுகத்திற்கு வந்தன.

ஒரே நாளில் பாம்பன் பாலத்தை கடந்த 7 கப்பல்கள்: சுற்றுலா பயணிகள் பரவசம்!

இதேபோல் கடலூரில் இருந்து வந்த தனியாருக்கு சொந்தமான இழுவை கப்பல் ஒன்று பாம்பன் பாலத்தை கடந்து கொச்சிக்கு சென்றது. இதனை தொடர்ந்து திருக்காட்டு பள்ளி துறைமுகத்திலிருந்து வந்த பார்ஜர் மற்றும் இழுவை கப்பல் ஆகிய இரண்டும் மும்பை நோக்கி சென்றது. இதன்பின் கொல்கத்தாவில் இருந்து வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொச்சிக்கு சென்றது.

ஒரே நேரத்தில் 7 கப்பல்கள் பாம்பன் பாலத்தை கடந்து சென்றது போருக்கு அணிவகுத்து செல்லுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது. கோடை விடுமுறையை கழிப்பதற்காக ராமேஸ்வரம் வந்திருந்த சுற்றுலா பயணிகள், பாம்பன் பாலத்தை கடந்து சென்ற கப்பல்களை கண்டு பரவசமடைந்தனர்.

இரா.மோகன்


படங்கள்: உ.பாண்டி