Published:Updated:

தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்!
தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்!

அரியலூர்: தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து அரியலூர், மயிலாடுதுறை, சீர்காழி, திருத்துறைப்பூண்டி, ஓமலூர் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 

தேர்தல் ஆணையத்தை கண்டித்து வி.ஏ.ஓ.க்கள் ஆர்ப்பாட்டம்!

தேர்தல் பணி படியை அன்றைய தினமே வழங்காததைக் கண்டித்தும், வாக்குச்சாவடி செலவினங்களுக்கு 2 ஆயிரத்து 500 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய இடங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் பங்கேற்றனர்.

சீர்காழி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இதேபோல் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் 50க்கும் அதிகமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.