Published:Updated:

அமைச்சர் கொடுத்த நிதியை வாங்க மறுத்த ஆளும் கட்சி நிர்வாகி மனைவி!

விகடன் விமர்சனக்குழு
அமைச்சர் கொடுத்த நிதியை வாங்க மறுத்த ஆளும் கட்சி நிர்வாகி மனைவி!
அமைச்சர் கொடுத்த நிதியை வாங்க மறுத்த ஆளும் கட்சி நிர்வாகி மனைவி!
அமைச்சர் கொடுத்த நிதியை வாங்க மறுத்த ஆளும் கட்சி நிர்வாகி மனைவி!

திருவாரூர்: முதல்வர் இரங்கல் தெரிவிக்காததால்,  அமைச்சர் கொடுத்த நிதியை வாங்க மறுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார் மறைந்த ஆளும் கட்சி நிர்வாகியின் மனைவி.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்துள்ள கிராமம் தில்லை விளாகம். இந்த கிராமத்தின் ஊராட்சி செயலாளராக இருந்தவர் பொன்முடி. இவர் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலின்போது மரணம் அடைந்தார். ஆளும் கட்சி நிர்வாகிகள் யார் மரணம் அடைந்தாலும் அதை முதல்வரின் கவனத்திற்கு அந்தந்த மாவட்ட செயலாளர்கள் கொண்டு போவதும், அதற்கு முதல்வர் இரங்கல் தெரிவிப்பதும் வழக்கம். ஆனால், பொன்முடியின் இறப்பிற்கு முதல்வர் இரங்கல் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அந்த குடும்பத்திற்கான கட்சி நிதியான ஒரு லட்ச ரூபாவை மாவட்ட செயலாளரும், உணவு அமைச்சருமான காமராஜ் கொண்டு போயிருக்கிறார். ஆனால் பொன்முடியின் குடும்பத்தினர், நாங்கள் வறுமையில் இருப்பது உண்மை தான். என் கணவர் கட்சிகாகவே உழைத்து மரணம் அடைந்திருக்கிறார். அந்த செய்தியை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு போயிருந்தால் இரங்கல் தெரிவித்திருப்பார். அதை செய்யாமல் ஊர் மெச்ச பணம் கொடுக்க வந்திருக்கிறீர்களா? என கேட்டிருக்கிறார்.

ஆனால் அமைச்சரோ, ஜெயா டி.வி.யில் உங்கள் கணவர் இறந்ததற்கு முதல்வர் இரங்கல் தெரிவித்த செய்தி ஒளிபரப்பானது என கூறி சமாளித்திருக்கிறார். இதை மறுத்த பொன்முடியின் மனைவி உங்கள் பணமே வேண்டாம். முதல்வர் இரங்கல் தெரிவித்த பிறகு வேண்டுமானால் இந்த பணத்தை வாங்கி கொள்கிறோம் என திருப்பி அனுப்பி இருக்கிறார்.

இதை சற்றும் எதிர்பாராத அமைச்சர், நாங்களே தேர்தலுக்கு அப்புறம் பதவி தப்புமானு கோவில் கோவிலா போய்க்கிட்டு இருக்கோம். இந்த டென்ஷன்ல இவங்க வேற பணம் வேண்டாம்னு திருப்பி அனுப்புறாங்க. இதெல்லாம் இவங்களுக்கு எங்க தெரிய போவுது? என புலம்பியபடியே திரும்பி போயிருக்கிறார்.

வீ.மாணிக்கவாசகம்