Published:Updated:

ஜல்லிகட்டிற்கு தடை: 8 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம்!

விகடன் விமர்சனக்குழு
ஜல்லிகட்டிற்கு தடை: 8 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம்!
ஜல்லிகட்டிற்கு தடை: 8 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம்!
ஜல்லிகட்டிற்கு தடை: 8 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம்!

சிவகங்கை: ஜல்லிகட்டிற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் 8 கிராமங்களில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு தோறும் தை மாதம் முதல் தொடரச்சியாக பல கிராமங்களில் ஜல்லிகட்டு விழா நடைபெறும். இந்த பகுதியில் ஜல்லிகட்டை கிராம விழாவாக மக்கள் கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில், உச்ச நீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்துள்ளது,  இந்த கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் கண்டர மாணிக்கம், பாகனேரி, வளையபட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள எட்டு கிராமங்களில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வீடுகள்தோறும் கருப்பு கொடி கட்டியும், மாடுகளின் கொம்புகளில் கருப்பு கொடி கட்டியும் கிராம மக்கள் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.

மேலும் வளையபட்டியில், சுமார் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு, காளைகளுக்கு கருப்பு கொடி கட்டி ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கருப்பு கொடி போராட்டத்தால், கிராமங்கள் அனைத்திலும் துக்க நிகழ்ச்சி நடைபெற்றது போல் காணப்படுகிறது.

அபுதாஹிர்