Published:Updated:

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!

Vikatan Correspondent
ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!
ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!

சென்னை: பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 

ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஜெயலலிதா உத்தரவு!

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையின் பழைய வாய்க்கால்களின் பாசன பகுதிகளுக்கு முதல் போக பாசனத்திற்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர் தேவைக்காகவும் ஆழியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடக் கோரி, ஆழியாறு பழைய ஆயக்கட்டு அணையிலிருந்து பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட கோயம்புத்தூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பொள்ளாச்சி வட்டத்திலுள்ள ஆழியாறு அணையிலிருந்து 5.6.2014 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டத்திலுள்ள 6,400 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதோடு, பொள்ளாச்சி நகர மக்களின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.