Published:Updated:

புதுச்சேரி: பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்!

Vikatan Correspondent
புதுச்சேரி: பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்!
புதுச்சேரி: பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்!
புதுச்சேரி: பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி உண்ணாவிரதம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீட்டை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழ்நாட்டை போல் புதுச்சேரியிலும் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி புதுச்சேரி நேரு வீதி நடைபாதை வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்துரு என்பவர் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கட்டாய உரிமை சட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி வியாபாரிகள் சங்கத் தலைவர் சந்துரு, புதுச்சேரி கல்வித்துறை வளாகத்தில் இன்று காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் இருந்தார்.

அப்போது, அவரிடம் காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதையடுத்து, அவரை உருளையன்பேட்டை காவல்துறையினர் கைது செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சந்துரு, காவல்துறையினர் என்னை விடுவித்தாலும் எனது போராட்டம் தொடரும் என்றார்.