Published:Updated:

ஆ.ராசா குற்றச்சாட்டுக்கு பிரதமர்,ப.சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

Vikatan Correspondent
ஆ.ராசா குற்றச்சாட்டுக்கு பிரதமர்,ப.சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்
ஆ.ராசா குற்றச்சாட்டுக்கு பிரதமர்,ப.சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

சென்னை, ஜூலை 30,2011

ஆ.ராசா குற்றச்சாட்டுக்கு பிரதமர்,ப.சிதம்பரம் பதிலளிக்க வேண்டும்: அதிமுக செயற்குழுவில் தீர்மானம்

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கின் குற்றம்சாட்டப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீதிமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தியுள்ளது. ##~~##

கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக செயற்குழு இன்று சென்னையில் நடைபெற்றது.

முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அவற்றின் முக்கிய அம்சங்களாவன:

* மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்ற ஜெயலலிதாவுக்கு பாராட்டு.

* அதிமுகவுக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு நன்றி.

* தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு நன்றி.

* தமிழகத் தேர்தலை நியாயமாக நடத்திய தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு.

* ஆட்சி அமைந்ததும் 7 வாக்குறுதிகளை நிறைவேற்றியதற்கு பாராட்டு.

* ஆட்சியமைத்த இரண்டே மாதத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு.

* மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறந்துவிட்ட முதல்வருக்கு பாராட்டு.

* டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

* ஆ.ராசாவின் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமரும், உள்துறை அமைச்சரும் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.

* முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

* சட்டமேலவையை ரத்து செய்தமைக்கு பாராட்டு.

* இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு பாராட்டு. 

* காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மத வன்முறைக்கு எதிரான சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டுவரக் கூடாது.

* தூத்துக்குடி - கொழும்பு இடையிலான கப்பல் போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும்.

* திருப்பூர் சாயப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கண்டதற்கு பாராட்டு.

* தமிழ்நாட்டு மக்களின் தேவைக்காகவும், நலத்திட்டங்களை மனதில் கொண்டு முதல்வர், பிரதமரிடம் அளித்த கோரிக்கை மனுவை உடனடியாக பரீசிலித்து நிதியுதவி அளிக்க வேண்டும்.

* மத்திய தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் வழங்க வேண்டும்.

* தமிழ்நாட்டுக்கு தேவையான உரங்களை மத்திய அரசு ஒதுக்க வேண்டும்.

* தமிழகத்தில் ஜவுளி தொழிலை பாதுகாக்க பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும்.

* தமிழகத்துக்கு தேவையான மண்ணெண்ணையை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.