Published:Updated:

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!

விகடன் விமர்சனக்குழு
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!
காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!

காரைக்குடி: கவிஞர் கண்ணதாசன் பிறந்த நாளை முன்னிட்டு காரைக்குடியில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!

தமிழகத்தின் புகழ் பெற்ற கவிஞரும், திரைபட பாடலாசிரிரும், அரசவை கவிஞருமாக விளங்கியவர் கவியரசர் கண்ணதாசன். இவருடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் சிறுகூடல்பட்டி. இங்கு பிறந்து, காரைக்குடியில் வளரந்த இவருக்கு காரைக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடியில் கண்ணதாசன் பிறந்த நாள் விழா!

இந்நிலையில், கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, காரைக்குடியில் உள்ள கண்ணதாசன் மணிமண்டபத்தில் உள்ள அவருடைய திருஉருவ சிலைக்கு, சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதேபோல், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சோழன் சித.பழனிச்சாமி, கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் தலைவர் அரு.நாகப்பன்  உள்ளிட்டோரும் கண்ணதாசன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவகோட்டை வருவாய் கோட்ட அதிகாரி கணேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அபுதாஹிர்

படங்கள்:
சாய்தர்மராஜ்