Published:Updated:

சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்!

விகடன் விமர்சனக்குழு
சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்!
சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கக் கோரி  விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையின்றி வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாயிகள் பஞ்சம் காரணமாக வெளி இடங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக இதுவரை அறிவிக்காத நிலையில் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை கிடைக்காமல் அவதி பெற்று வருகின்றனர்.

இதனை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் தமிழக விவசாய சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள, திருப்புவனம், திருபத்துர், மானாமதுரை, தேவகோட்டை, இளையான்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு தொகை வழங்க வேண்டியும், சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்கவேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர்.

-அபுதாஹிர்