Published:Updated:

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!
மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

அரியலூர்: மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக் கோரி அரியலூரில் தமிழ்நாடு விவசாயங்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாட்டு வண்டிகளில் மணல் அள்ள அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்!

மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும், அம்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட முதியோர்களுக்கு முதியோர் உதவித்தொகையை உடனே வழங்க   வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, அரியலூர் தாலுக்கா அலுவலகம் முன்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், அரியலூர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும், அம்மா திட்டத்தின் மூலம் தேர்வு செய்த அனைத்து முதியோர்களுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும், 100நாள் வேலை திட்டத்தை  150 நாளாக உயர்த்தி ஊதியத்தை முழுமையாக வழங்கிட வேண்டும், கரும்பிற்கு அரசு அறிவித்துள்ள தொகையை வழங்காத கோத்தாரி ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்ங்கள் எழுப்பப்பட்டன.

-திலீபன்