Published:Updated:

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து!

மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து!
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து!
மதுரை காமராஜர் பல்கலை துணைவேந்தர் நியமனம் ரத்து!

மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக கல்யாணி நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி மதிவாணன் நியமத்தை ரத்து செய்யக் கோரி இஸ்மாயில் மற்றும் ஜெயராஜ் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், கல்யாணி மதிவாணன் பேராசிரியராக பணியாற்றவில்லை என்றும், துணை ஆசிரியராக மட்டுமே பணியாற்றினார் என்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், வேலுச்சாமி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கல்யாணி நியமனம் செல்லாது என்று உத்தரவிட்டனர்.

மேலும், பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு புறம்பாக கல்யாணி நியமனம் செய்யப்பட்டிருப்பதாக நீதிபதிகள் கூறினர்.