Published:Updated:

தாமிரபரணி நதியை பாதுகாக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

தாமிரபரணி நதியை பாதுகாக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!
தாமிரபரணி நதியை பாதுகாக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

நெல்லை: கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக தனிக்கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு, தாமிரபரணி நதியையை பாதுகாப்பதற்கும் தேவையான சிறப்பு திட்டத்தை பட்ஜெட்டில் அறிவிக்க வேண்டும் எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
 

தாமிரபரணி நதியை பாதுகாக்க மத்திய அரசுக்கு கோரிக்கை!

நெல்லை கிழக்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, நாட்டில் பல்வேறு நதிகளும், நீர் நிலைகளும் ஆக்கிரமிப்புகளாலும், ஆலைக்கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளாலும் அதன் நிலைத் தன்மையை இழந்து பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி தருகின்றன. இவற்றையும் சீர்ப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

கங்கை நதியை சுத்தம் செய்வதற்காக தனிக்கவனம் செலுத்தி அதற்கான  வேலைகளை செய்து வரும் மத்திய அரசு, தென்மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம் போன்றவற்றிற்கு ஜீவநதியாக தாமிரபரணி மட்டுமே விளங்குவதால் நதியை பாதுகாப்பதற்கு தேவையான சிறப்பு திட்டத்தை அறிவித்து, அதற்கான சிறப்பு நிதியை வரும் பட்ஜெட்டில்  அறிவிக்க வேண்டும்.

நதிகரையில் புற்றீசல் போல் உருவாகி அனுமதி இன்றி செயல்படும் செங்கல் சூளைகளால் நதி நீர் பெரிதும் மாசுபடுவதொடு பனைமரங்கள் பெரிதும்  அழிக்கபட்டு வருவதை தடுத்து நிறுத்த கோரியும் கட்சியின் பிரசார இயக்கத்தின் தொடர்ச்சியாக நாளை மாலை பாளை ஜவஹர் திடலில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

ரயில்வே திட்டங்களில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் உருப்படியான எந்த திட்டங்களும் செயல்படுத்தபடவில்லை. "தான் பிரதமரானால் கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான இருப்பு பாதை இரட்டை வழிதடம் ஆக்கப்படும்" என நாகர்கோயிலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மோடி அளித்த வாக்குறுதியோடு நெல்லையை  தலைமை இடமாக கொண்டு தனி கோட்டம் அமைக்க வேண்டும் என்கிற தென் தமிழக  மக்களின் கோரிக்கையையும் வரும் பட்ஜெட் கூட்ட தொடரில் நிறைவேற்ற வேண்டும்.

தமிழக ரயில்வே திட்டங்களுக்கும், ஏனைய திட்டங்களுக்கும் நிதி பெற்றிட தமிழகத்தின்  அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து எம்பிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட உள்ளது. பட்ஜெட் கூட்ட தொடர் நெருங்கும் வேளையில் நாடாளுமன்ற மரபுகளை  மதிக்காமலும், ஏழை மற்றும் நடுத்தர மக்களை கசக்கி பிழியும் வகையில் ரயில் கட்டணங்களை உயர்த்தியதற்கு கண்டனங்களை தெரிவிப்பதோடு பெயரளவுக்கு இல்லாமல் கட்டண உயர்வை திறம்ப பெற்று ரயில்வே துறைக்கு வேறு வகையிலான வருவாய்க்கு தேவையான உத்திகளை கையாள வேண்டும்.

இந்திய நாடு விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத்தை நம்பி மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் வாழ்ந்து வருகின்றனர். எனவே மத்திய, மாநில அரசுகள் விவசாயத்திற்கு என தனி வரவு-செலவு அறிக்கை தயாரித்து மீண்டும் ஒரு பசுமை புரட்சி ஏற்பட வழி வகை செய்ய வேண்டும்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் காவிரி டெல்டா பகுதிகளை பாலைவனமாக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை முற்றிலுமாக கைவிட வேண்டும். காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. மத்திய அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்பட்ட பின்னரும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை அமைக்காமல், மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. இது குறித்து தமிழக மக்களின் குரலை ஓங்கி ஒலித்திட அணைத்து கட்சி கூட்டம் ஒன்றை தமிழக அரசு கூட்ட  வேண்டும். ஏற்கனவே நிதி பற்றாகுறையால் திண்டாடி வரும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள், மக்களுக்கு பயன் தரும் அம்மா உணவகங்களை சிறப்பாக நடத்திட தமிழக அரசு சிறப்பு நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கூறினார்.